2 மாதம் தான்.. 1800 கிலோ மாம்பழங்கள் - ஆன்லைனிலேயே விற்பனை செய்த விவசாயி!

By Sumathi May 31, 2024 08:45 AM GMT
Report

விவசாயி ஒருவர் 1800 கிலோ மாம்பழங்களை ஆன்லைனில் விற்பனை செய்துள்ளார்.

கர்சிரி மாங்கோஸ்

இந்தியாவில் பங்கனப்பள்ளி முதல் அல்ஃபோன்சா வரை 1,500க்கும் மேற்பட்ட மாம்பழங்கள் வகைகள் உள்ளன. ஒவ்வொரு வகைக்கும் தனி சுவை.

mangoes

ராய்ச்சூர், மண்டலகேரா கிராமத்தை சேர்ந்தவர் ஆஞ்சனேயா. டிப்ளமோ படித்த இவர் விவசாயியாக உள்ளார். பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் ஏழு ஆண்டுகள் பணியாற்றி வந்துள்ளார்.

ஆன்லைனில் வாங்கிய கேக்; பறிபோன 10 வயது சிறுமியின் உயிர் - என்ன நடந்தது?

ஆன்லைனில் வாங்கிய கேக்; பறிபோன 10 வயது சிறுமியின் உயிர் - என்ன நடந்தது?

ஆன்லைன் விற்பனை

வேலையை விட்டு விட்டு, சொந்த ஊருக்கு சென்று விவசாயியாக மாறி தன் சொந்த நிலத்தில் பயிரிட துவங்கியுள்ளார். தொடர்ந்து, சாத்துக்குடி, எலுமிச்சை பயிரிட்டு விற்பனை செய்து வந்துள்ளார். தற்போது பல விதமான மாம்பழங்களை விளைவித்துள்ளார்.

2 மாதம் தான்.. 1800 கிலோ மாம்பழங்கள் - ஆன்லைனிலேயே விற்பனை செய்த விவசாயி! | Farmer Sold 1800 Kg Of Mangoes Online

இதற்கிடையில், மாம்பழ வளர்ச்சி மற்றும் மார்க்கெட் கார்ப்பரேஷன் ‘கர்சிரி மாங்கோஸ்’ என்ற ஆன்லைன் விற்பனை செயலியை அறிமுகம் செய்தது.

அதன் வழியாக இவர் மாம்பழங்களை வாடிக்கையாளர்களின் வீட்டு வாசலுக்கு கொண்டு சேர்த்து ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வருகிறார். அதன்படி, 2 மாதங்களில் 1,800 கிலோ மாம்பழங்களை விற்பனை செய்துள்ளார்.