பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த விவசாயி - வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது என்ன?

Crime Viluppuram Murder
By Vidhya Senthil Sep 29, 2024 05:40 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

விழுப்புரம் அருகே வட்டாட்சியர் அலுவலகத்தில் முன் விவசாயி தீகுளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் 

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் கெங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மோகன்ராஜ் மீது வட்டாட்சியர் அலுவலகத்தில் சிலர் புகார் அளித்திருந்தனர். அந்த புகாரில் அரசு நிலத்தை இவர் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்பட்டு இருந்தது.

muder

அதன் அடிப்படையில் , வட்டாட்சியர் தனலட்சுமி தலைமையில் நேற்று சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.இதில் இருதரப்பினருக்கு முடிவு ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.

மேலும் தனது நிலத்தை 23 பேர் சேர்ந்து அபகரிக்க முயல்வதாகக் கூறி மனமுடைந்து கடிதம் எழுதி வைத்துவிட்டு, திடீரென மோகன்ராஜ் தனது உடலில்பெட்ரோல் ஊற்றித் தீவைத்துக் கொண்டார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீஸார்அவரை மீட்டு, சிகிச்சைக்காகத் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

சாலையோரம் நின்ற கார்..ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலம் -கொலையா? தற்கொலையா?

சாலையோரம் நின்ற கார்..ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலம் -கொலையா? தற்கொலையா?

பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காகச் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மோகன்ராஜ், அங்குச் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 தற்கொலை     

மேலும் பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தனி நபர் ஒருவரின் நிலப்பறிப்புக்கு ஆதரவாகக் களமிறங்கி, பொய்யான தகவல்களை அடிப்படையாக வைத்து நெருக்கடி கொடுத்து,ஏழை விவசாயி ஒருவரின் தற்கொலைக்குக் காரணமான 23 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து,

viluppuram

அவர்களை கைது செய்வதுடன், சட்டப்படியான தண்டனை பெற்றுத்தர வேண்டும். தற்கொலை செய்து கொண்ட மோகன்ராஜ் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் தமிழக அரசு சார்பில் வழங்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.