விவசாயிகள் போராட்டம் - பாகிஸ்தான் தீட்டும் சதித்திட்டம் - வெளியான பகீர் ஆடியோ
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அதனை வைத்து பாகிஸ்தான் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக பகீர் ஆடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
விவசாயிகள் போராட்டம்
விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாய விலையை உறுதி செய்தல் தொடர்பான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியில் பேரணியில் ஈடுபட முடிவெடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து புறப்பட்டனர். ஆனால், ஹரியானா அரசு விவசாயிகள் எல்லையை கடந்து செல்ல முடியாத வகையில் தடுப்புகளை அமைத்து விவசாயிகளை தடுத்து வருகிறது. டிரோன் மூலம் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி விவசாயிகளை விரட்டி அடித்தனர்.
சதித்திட்டம்
இன்று பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில், இந்த போராட்டத்தை வைத்து பாகிஸ்தான் நாடு தீட்டியுள்ள சதித்திட்டத்தின் ஆடியோ என்ற பெயரில் ஆடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வருகின்றது.
Social Media is a big weapon. #FarmersProtest is best for Khalistanis to ignite problems for India & Govt - Audio clip of Pakistan based agents strategising on how to create chaos inside India.pic.twitter.com/o5ilm3zQy4
— Megh Updates ?™ (@MeghUpdates) February 17, 2024
இந்த ஆடியோவில் ஒருவர், பஞ்சாப்பின் காலிஸ்தான் ஆதரவாளர்களுடன் விவசாயிகள் போராட்டத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும், இந்தியா நாட்டில் குழப்பத்தையும், நாட்டின் உள்விவகாரங்களை சீர்குலைக்கவும் இது சரியான தருணம் என்று பேசுவது கேட்க முடிகிறது.