இது புதுசா இருக்குனே.. தோட்டத்தில் விவசாயி வைத்த நடிகைகள் படம் - இப்படி ஒரு காரணமா?
தோட்டத்தில் விவசாயி, நடிகைகளின் படங்களை கட்டி தொங்கவிட்டது வைரலாகி வருகிறது.
நடிகைகள் படம்
விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் பயிர்களுக்கும் கண் திருஷ்டி படாமல் இருக்க பிய்ந்து போன துடைப்பம், காலணியை தொங்கவிடுவது வழக்கம். மேலும் சோள காட்டு பொம்மையையும் வைப்பதும் நமக்கு தெரிந்த விஷயம்.
அந்த வகையில், ஒரு வேடிக்கையான விஷயம் கர்நாடகாவில் நடைபெற்றது. அதாவது வெள்ளரிக்காய் பயிரிட்டுள்ள விவசாயி, அதன் மீது கண்பட கூடாது என்பதற்காக நடிகைகளின் படங்களை கம்புகளில் கட்டி தொங்கவிட்டுள்ளார்.
இந்த நூதன சிந்தனை கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் சன்னப்பட்டணா தாலுகா காரஹள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயிக்கு தோன்றியது. அதன் விளைவாக தனது தோட்டத்தில் பயிரிட்டுள்ள வெள்ளரிக்காய் மீது கண் திருஷ்டி படக்கூடாது என்பதற்காக நடிகைகளின் படங்களை தொங்கவிட்டுள்ளார்.
தோட்டத்தில்..
அதில் ராதிகா பண்டிட், ராகிணி திவேதி, ராஸ்மிகா மந்தனா, ஸ்ரீலீலா, சோனல் உள்ளிட்ட நடிகைகளின் படங்களை சிறிய பேனர் போல் அச்சிட்டு கம்பிகளில் கட்டியுள்ளார். இவ்வாறு செய்தால் தோட்டத்திற்கு வருவோரின் கண்கள் வெள்ளரிக்காய் மீது படாமல், நடிகைகளை தான் பார்க்கும்,
இதன் மூலம் வெள்ளரிக்காய் மீது கண்திருஷ்டி படாமல் விளைச்சல் அதிகரித்து நல்ல மகசூல் கிடைக்கும் என அந்த விவசாயி கருதியதாகவும், அதனால் இந்த யோசனையை அவர் நடைமுறைப்படுத்தி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
தனது வெள்ளரிக்காய் தோட்டத்தில் விவசாயி, நடிகைகளின் படங்களை கட்டி தொங்கவிட்டது சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.