ஒரே கல்லில் கோடீஸ்வரரான விவசாயி - வேலையை விட்டு நிலத்தில் தேடும் பொதுமக்கள்!
ஆந்திராவில் ஒரு விவசாயி தனது விளைநிலத்தில் வைரக்கல்லை எடுத்து கோடீஸ்வரன் ஆனார், அதனால் மக்கள் நிலத்தில் தேடுதல் பணியை தொடங்கியுள்ளனர்.
வைரக்கல்
ஆந்திர பிரதேஷ் மாநிலம், கர்னூல் மாவட்டத்தில், 2019-ம் ஆண்டில் ஒரு விவசாயி 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைரத்தை தனது விளைநிலத்தில் கண்டு எடுத்துள்ளார்.

தொடர்ந்து, கடந்த ஆண்டு 2 விவசாயிகள் 2 விலைமதிப்பற்ற வைர கற்களையும் கண்டுபிடித்து வணிகர்களிடம் நல்ல தொகைக்கு விற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஜொன்னகிரி, துக்கிலி, மடிகேரா, பெகதிராய், பேராபலி, மஹாநந்தி மற்றும் மஹாதேவபுரம் கிராமங்களில் உள்ள வயல் பகுதிகளில் மழைக்கு பின்னர் வைரக்கற்கள் தானாகவே வெளியே வரும் என அப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.
தேடுதல் வேட்டை
இந்நிலையில், விவசாயி ஒருவர் 30 காரட் வைரத்தை கண்டு எடுத்து, அதனை ரூ.2 கோடிக்கு விற்று ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆகியுள்ளார்.
அதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் தங்களது முழு நேர வேலையை விட்டுவிட்டு அவர்களது நிலத்தில் கூடாரம் அமைத்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், விவசாயிகள் இதன்மூலம் பணக்காரர் ஆகிவிடலாம் என்று தங்கள் நிலத்தை உழுது முழு நேர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
இது போன்று உண்மையாகவே வைரக்கல் இயற்கையாக கிடைக்கிறதா என்று போலீசார் ரகசிய விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.