தண்ணீரின்றி கருகிய நெற்பயிர்.. பார்த்ததும் நெஞ்சடைத்து உயிரைவிட்ட விவசாயி - சோகம்!

Ministry of Agriculture Death Nagapattinam
By Vinothini Sep 26, 2023 05:35 AM GMT
Report

நெற்பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகியதை கண்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாடிய பயிர்கள்

டெல்டா பகுதியான நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை அடுத்த திருவாய்மூர் பகுதியை சேர்ந்தவர் எம்.கே. ராஜ்குமார் (47). இவர் விவசாயம் செய்து வருகிறார், இந்த ஆண்டு மேட்டூர் அணை உரிய காலத்தில் திறக்கப்பட்டதால் சுமார் 15 ஏக்கர் அளவிலான விளைநிலத்தில் குறுவை சாகுபடி செய்திருந்தார்.

farmer-died-of-seeing-dried-paddy-crops

ஆனால் கர்நாடகத்திலிருந்து நீர்வரத்து சரியாக இல்லாததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்தது. அதனால் பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவும் 6000 கன அடியாக குறைக்கப்பட்டது. மேலும், பல ஏக்கர் பயிர்கள் கருகியது, இதில் ராஜ்குமாரின் பயிர்களும் வீணானது.

நெற்பயிர்களை அழித்து விளைநிலத்தில் சுரங்க பணியை தொடங்கிய என்.எல்.சி - விவசாயிகள் வேதனை!

நெற்பயிர்களை அழித்து விளைநிலத்தில் சுரங்க பணியை தொடங்கிய என்.எல்.சி - விவசாயிகள் வேதனை!

விவசாயி உயிரிழப்பு

இந்நிலையில், நேற்று காலை ராஜ்குமார் காய்ந்த பயிர்களை கண்டு சோகம் தாங்காமல் திடீரென நெஞ்சுவலி வந்து வயலிலேயே மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு திருக்குவளையிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

farmer-died-of-seeing-dried-paddy-crops

அங்கிருந்து உடனடியாக மேல் சிகிச்சைக்கு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கருகிய பயிரை கண்டு சோகம் தாங்காமல் நெஞ்சுவலியால் உயிரிழந்த சம்பவம் விவசாயிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.