பழிவாங்கும் செயலா..? ஓடவிட்ட ஹர்திக்...விரக்தியடைந்த ரோகித் - வெறுப்பான ரசிகர்கள்..!
நேற்று குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி போராடி தோல்வியை தழுவியது.
குஜராத் வெற்றி
மும்பை அணிக்கு எதிராக ஆட்டத்தில் நேற்று முதலில் பேட் செய்த குஜராத் அணி 6 விக்கெட்டை இழந்து 168 ரன்களை எடுத்தது. அணியில் அதிகபட்சமாக சாய் சுதர்ஷன் 45(39) ரன்களை எடுத்து அவுட்டாகினார். மும்பை அணியில் பும்ரா 4 ஓவர்களில் 14 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி போராடி தோல்வியை சந்தித்தது. கடைசி கட்டத்தில் 11 ரன்களே தேவைப்பட்ட நிலையில், அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா அவுட்டாக, குஜராத் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஓட விட்ட ஹர்திக்
இந்த தொடரில் மும்பை அணிக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா மீது பல எதிர்பார்ப்புகள் எழுந்தது. ஆனால், அவர் கடைசி ஓவரில் அணியை வெற்றிக்கு கொண்டு செல்ல முடியாமல் ஏமாற்றினார்.
கேப்டனாக அறிவிக்கப்பட்டது முதலே ஹர்திக் பாண்டியாவை ரோகித் சர்மாவின் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இது நேற்று இன்னும் அதிகரித்தது.
போட்டியின் போது, முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவை பில்டிங்'கில் மாற்றி மாற்றி ஹர்திக் பாண்டியா நிற்கவைத்ததை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் தொடர்ந்து எதிர்மறையான கருத்துக்களை ஹர்திக் பாண்டியா நோக்கி தெரிவித்து வருகின்றனர்.
CSK kanni எனக்கே கஷ்டமா இருக்குடா ? pic.twitter.com/HkkBppWKye
— Navin Chakravarthy - Say No To Drugs & DMK (@navin_offl) March 24, 2024
இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி, மும்பை அணியின் ரசிகர்களை கடந்து பல அணியின் ரசிகர்களும் இதற்கு கடுமையான கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.