மைதானத்தில் ரிஷப் பண்டை கலாய்த்த ரசிகர் - கடுப்பில் ட்விட்டர்!
ரிஷப் பண்டை மைதானத்தில் இருந்த ரசிகர் ஒருவர் நடிகையை வைத்து கலாய்த்த வீடியோ வெளியாகி பரவி வருகிறது.
ரிஷப் பண்ட்
டி20 உலகக்கோப்பை அரையிறுதிக்காக விறுவிறுப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றன. முதல் அரையிறுதிப்போட்டியில் நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் நாளையும், 2வது அரையிறுதியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் நவ.10ல் மோத உள்ளன.
இந்நிலையில், மைதனாத்தில் ரிஷப் பண்ட் நடந்து சென்றுகொண்டிருக்கும் போது, அங்கு இருந்த ரசிகர், நடிகை ஊர்வசி ரவுத்தேலாவின் பெயரை சொல்லி அவரை கிண்டலடித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
காதல் கிசுகிசு
நடிகை ஊர்வசியும், கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டும் காதலித்ததாக முன்பு கிசுகிசுக்கப்பட்டனர். சமீபத்தில் நடிகை ஊர்வசி பேட்டி ஒன்றில் பேசுகையில், மிஸ்டர் ஆர்.பி. டெல்லியில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் எனக்காக இரவு முழுவதும் காத்துக் கொண்டிருந்தார் என்று கூறியதால்
Jaake lele phir ?#Rishabpant #UrvashiRautela pic.twitter.com/PGGX1K5kIl
— Antareep Gohain (@antareep_s2002) November 7, 2022
இருவரும் இன்ஸ்டாகிராமில் மோதிக் கொண்டார்கள். பண்ட்டை தம்பி என்று ஊர்வசி சொல்ல, பதிலுக்கு அவர் தங்கச்சி என்று சொல்ல இவர்களின் இரண்டு பேரின் சண்டை வேற லெவலுக்குச் சென்றது குறிப்பிடத்தக்கது.