ரசிகர்கள் இதை செய்ததில் மகிழ்ச்சி: அஸ்வின்

india team sports
By Jon Feb 28, 2021 02:01 AM GMT
Report

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 400-வது விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். இதுபற்றி அஸ்வின் பேசுகையில், ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது எனது பேட்டிங் பற்றி கோஹ்லி, ரவிசாஸ்திரி என்னுடன் பேசினார்கள். எனது பந்து வீச்சில் ஏதோ ஒரு சிறப்பை அவர்கள் கண்டனர்.

ஐ.பி.எல். போட்டியிலும் எனது பந்து வீச்சு சிறப்பாக இருந்தது என்று நினைக்கிறேன். லாக் டவுன் காலத்தில் கடுமையாக உழைத்து சுமார் 7-8 கிலோ எடை குறைத்தேன் என தெரிவித்தார்.

மேலும் 400 விக்கெட்டுகளை எட்டியது உண்மையிலேயே அற்புதமாக இருக்கிறது என்றும், ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டியதில் மகிழ்ச்சி எனவும் தெரிவித்துள்ளார்.