எங்க ஹீரோ தான் கெத்து ..! திரையரங்கில் அடித்து கொண்ட ரசிகர்கள்..!
திரையரங்கில் ரசிகர்கள் அடித்துக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரசிகர்களின் கொண்டாட்டம்
தற்போதைய காலகட்டங்களில் திரையரங்கில் ரசிகர்களின் கொண்டாட்டம் எல்லை மீறி போகின்றது. இது குறித்து சமூக ஆர்வலர்களும் வேதனை தெரிவித்து வரும் சூழலில், இது நின்ற பாடில்லை.
அவ்வாறு, ஒரு சம்பவம் தான் தற்போது மீண்டும் அரங்கேறியுள்ளது. தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களில் நடிகர் பவன் கல்யாணின் "கேமராமேன் கங்காதோ ராம்பாபு" படம் ரீ-ரிலீஸ் ஆகியுள்ளது.
தாக்குதல்
அதே போல, ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவான "யாத்ரா 2" படமும் வெளிவந்துள்ளது.
ஒய்.எஸ்.ஜெகன் மற்றும் பவன் கல்யாண் கட்சியினருக்கு மத்தியில் நீண்டகாலமாக தொடர்ந்து பிரச்சனை நீடித்து வருகின்றது. இந்த நிலையில் ஹைதராபாத்தில் உள்ள ஒரு திரையரங்கில், படம் ஓடிக்கொண்டிருக்கும் பொழுது ஜெகன் மோகன் ரெட்டி தொண்டர்களுக்கும் பவன் கல்யாண் ரசிகர்களுக்கும் கைகலப்பு ஆகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
#YATRA2 Movie : Fans of #YSJagan & #PawanKalyan Clashed During the Screening of The Film at Prasads, Hyderabad???♂️ pic.twitter.com/arMaKg1KE0
— Saloon Kada Shanmugam (@saloon_kada) February 8, 2024
இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.