அவர் முன்னாடியே இப்படியா சொல்வது.. ரஜினிகாந்த் பேச்சால் கடுப்பான ரசிகர்கள்!
நடிகர் ரஜினி மேடையில் பேசியது குறித்து ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
ஜெயிலர் வெற்றி விழா
நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினி, தமன்னா நடிப்பில் வெளியான படம் ‘ஜெயிலர்’. இந்த படம் விமர்சன ரீதியாக தோல்வி அடைந்திருந்தாலும் வசூல் ரீதியாக 600 கோடியை வசூல் செய்துள்ளது. இதனால் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெற்றி விழா நடத்தியது.
அதில் படக்குழுவினர் மட்டும் கலந்துகொண்டனர், அதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த் "ஜெயிலர் படம் பார்த்த பிறகு பேசிக்கொண்டிருந்தோம். வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் ரீ-ரெக்கார்டிங் முன்பு படம் சுமாருக்கும் மேலாக இருந்தது.
அனிருத் படத்தை தூக்கி நிறுத்தி விட்டார். எப்படியாவது எனக்கு ஹிட் கொடுக்கவேண்டும், நெல்சனுக்கு ஹிட் கொடுக்க வேண்டும் என மெனக்கெட்டார் அனிருத்" என்று கூறினார்.
ரசிகர்கள் காட்டம்
இந்நிலையில், இவரது பேச்சால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள், "இதற்கு முன்பு நெல்சன் இயக்கிய ‘பீஸ்ட்’ படம் தோல்வி அடைந்தாலும் நடிகர் விஜய் அது குறித்து நெல்சனை சோர்வடைய செய்யாமல், ‘ஜெயிலர்’ படத்திற்கு ஊக்குவித்தது, அடுத்து இன்னொரு படம் செய்வோம் என சொல்லியது போன்ற விஷயங்களை செய்தார்.
Then : Spoke about Beast negative reviews in Audio Launch In front of Nelson
— ?. (@KuskithalaV6) September 18, 2023
Now : Telling that #Jailer is an average movie without Anirudh in front of Nelson.
Don't you have shame @rajinikanth ?? pic.twitter.com/lEGi835NoC
ஆனால், ரஜினி போன்ற பெரிய நட்சத்திரங்கள் மேடையிலேயே சுமாரான படம் என சொல்வதை எப்படி எடுத்துக் கொள்வது எனத் தெரியவில்லை, அதிலும் இயக்குனர் நெல்சன் முன்பே சுமாரான படம் என்று கூறுவது வருத்தத்திற்குரியது" என்று கூறி ரஜினியை விமர்சித்து வருகின்றனர்.