வீரப்பன் ஒரு ராட்சசன் அவனை வதன் செய்யணும் : மேடையில் கொந்தளித்த ரஜினிகாந்த்

Rajinikanth
By Irumporai 2 வாரங்கள் முன்
Report

நடிகர் ரஜினிகாந்த் வீரப்பன் குறித்து பேசியுள்ளது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமா மற்றும் இந்திய சினிமாவில் தனது நடிப்பின் மூலமாக சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த் , தனியாக நடிக்க ஆரம்பித்தது தனக்கென பிரத்யேக உடல்மொழியையும், ஸ்டைலையும் உருவாக்கிக்கொண்டார் ரஜினிகாந்த்.

  வீரப்பன் குறித்து சர்ச்சை

ரஜினிகாந்தின் நடிப்பும், ஸ்டைலும், ரசிகர்களை கவர உச்சத்திற்கு சென்றார். அவரது நடை, உடை, பாவனையை பார்த்து சொக்கிப்போன ரசிகர்கள் அவரை சூப்பர் ஸ்டார் என அழைக்கத் தொடங்கினர். அதே சமயம் தனது சர்ச்சையான பேச்சுகள் மூலமாக பரபரப்பினையும் ஏற்படுத்திவிடுவார் ரஜினிகாந்த் , ஜெயலலிதா குறித்து தனது பழைய பேட்டியில் தமிழ்நாட்டினை ஆண்டவனாலும் காப்பாற்றமுடியாது என அவர் கூறியது தற்போதைய அரசியலும் பேசு பொருளாக உள்ளது.

வீரப்பன் ஒரு ராட்சசன் அவனை வதன் செய்யணும் : மேடையில் கொந்தளித்த ரஜினிகாந்த் | Rajinikanth Talks About Veerapan Movie Function

பல வருடங்களுக்கு முன்பு வீரப்பன் குறித்து ரஜினி பேசியது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, புனிதராஜ்குமார் நடித்த அப்பு என்ற திரைப்படத்தின் 100 வது நாள் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ரஜினிகாந்த சந்தன கடத்தல் வீரப்பன் போன்ற ஒருவனை நான் பார்த்ததே இல்லை. அவன் ஒரு ராட்சசன். அவனை எல்லாம் சூரசம்ஹாரம் செய்ய வேண்டும்" என கொந்தளித்து பேசினார் புனித்ராஜ்குமாரின் தந்தையையும் கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாராக இருந்த ராஜ்குமாரை விரப்பன் கடத்திய போது அவரை மீட்க ரஜினி தீவிரமாக அப்போது முயற்சி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.