சிராஜிற்கு கார் கொடுக்க சொன்ன ரசிகர் - ஆனந்த் மஹிந்திரா அதற்கு என்ன சொன்னார் தெரியுமா?
ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
அசத்திய சிராஜ்
16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், சூப்பர்4 சுற்று முடிவில் இந்தியாவும், இலங்கையும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இதில் இலங்கை அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 8வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்த போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் வீசிய ஒரே ஓவரில் இலங்கை வீரர்கள் நிசாங்கா சமரவிக்ரமா, சாரித் அசலங்கா , தனஞ்ஜெயா டி சில்வா ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
கார் பரிசு?
தொடர்ந்து, அதிவேகமாக 5 விக்கெட்டுகள் வீழ்த்திய சாதனையாளர் பட்டியலில் இணைந்தார். இந்நிலையில், இதுகுறித்து ஆனந்த் மஹிந்திரா 'நம் எதிரிகளுக்காக என் இதயம் அழுவதை நான் இதுவரை உணர்ந்ததில்லை என்று நான் நினைக்கவில்லை. அது ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியை அவர்கள் மீது கட்டவிழ்த்துவிட்டது போல் இருக்கிறது.
Been there, done that… https://t.co/jBUsxlooZf
— anand mahindra (@anandmahindra) September 17, 2023
நீங்கள் ஒரு மார்வெல் அவெஞ்சர் முகமது சிராஜ் எனப் பாராட்டு தெரிவித்துள்ளார். இதற்கு ரசிகர் ஒருவர் நீங்கள் முகமது சிராஜிற்கு எஸ்யுவி கார் கொடுங்கள் என்று கேட்டிருந்தார்.
இதற்கு ஏற்கனவே அதைச் செய்துள்ளேன் என ஆனந்த் மஹிந்திரா பதிலளித்தார்.
முன்னதாக டெஸ்ட் ஆட்டத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்த சிராஜ்-க்கு மஹிந்திரா 'தார்' எஸ்யுவி காரை பரிசாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.