4 யுடியூபர்கள் சம்பவ இடத்திலேயே மரணம் - நேருக்கு நேர் மோதிக்கொண்ட கார்கள்!
இணையத்தில் தற்போது பலரும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
யுடியூபர்கள்
அதற்கு இந்த நவீன சமூகஊடகங்களும் பெரிய அளவில் உதவுகின்றன. பலரும் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வெகுஜன மக்களின் பாராட்டுகளை பெற்று வருகிறார்கள். அப்படி தான் இன்று பல பிரபலமான யுடியூபர்கள் இருக்கிறார்கள்.
அப்படி உத்திரபிரதேச மாநிலத்தில் பிரபலமாக இருப்பவர்கள் தான் லக்கி, சல்மான், ஷாருக் மற்றும் ஷாநவாஸ். அம்மாநிலத்தில் பிரபலமான இவர்கள், பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு விட்டு திரும்பி வந்து கொண்டிருந்த போது, பயங்கர கார் விபத்தில் சிக்கியுள்ளார்கள்.
மரணம்
உத்தரப்பிரதேச மாநிலம், அம்ரோஹா மாவட்டத்தில் இன்று அதிகாலை இந்த பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய நிலையில், தகவல் அறிந்து வந்த மீட்புப்பணிகளை துரிதப்படுத்தியுள்ளார்கள்.
ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே நான்கு யுடியூபர்களும் உயிரிழந்துள்ளார்கள். காயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளார்கள்.
ரவுண்ட் 3 வேர்ல்ட் என்ற யூடியூப் சேனல் நடத்தி வரும் இவர்கள், உத்திரபிரதேச மாநிலத்தின் பிரபலமான யுடியூபர் என்பது குறிப்பிடத்தக்கது.