நடுரோட்டில் பெண்களிடம் பாலியல் சில்மிஷம் செய்த பிரபலம் - ரசிகர்கள் அதிர்ச்சி!
பிரபல மல்யுத்த வீரர் பெண்களிடம் மோசமாக நடந்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் சில்மிஷம்
குஜராத், ராஜ்கோட் பகுதியை சேர்ந்தவர் இளம்பெண். யோகா டீச்சராக வேலை பார்த்து வருகிறார். சமீபத்தில் போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் சாலையில் நடந்து சென்றபோது, முகமூடி அணிந்து வந்த மர்மநபர் ஒருவர் தன்னிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகவும்,
ஆனால் அவர் யாரென்று தெரியவில்லை. அடிக்கடி அந்த உருவத்தை தான் பார்ப்பதாகவும், இதுபோன்ற சில்மிஷ சேட்டைகளில் ஈடுபட்டு வருவதால், கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.
மல்யுத்த வீரர்
அதன் அடிப்படையில், போலீஸார் 4 படைகளை அமைத்து தீவிர விசாரணையில் ஈடுப்பட்டனர். அந்தப் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்கள், அருகிலுள்ள வணிக வளாகங்கள், கடைகள், குடியிருப்புகள் என அனைத்து இடங்களையும் ஆய்வு செய்தனர். அதில் முகமூடி அணிந்து நபர் ஒருவர் சென்றது பதிவாகியிருந்தது.
மேலும், அவர் ஒரு பிரபல மல்யுத்த வீரர் கவுஷல் பிபாலியா(24) என்பது தெரியவந்தது. 2016, 2017, 2018 மற்றும் 2019 ம் ஆண்டுகளில் மாநில அளவில் நடைபெற்றுள்ள 74 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் பங்கேற்று தங்கப் பதக்கம் பெற்றவர் சமூக வலைதளங்களில் புகழப்பட்டவர்.
அதிர்ச்சி
இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார் அவரை கைது செய்து விசாரித்தனர். அதில் பாலியல் சீண்டல் இல்லாமல் இந்த நபரால் இருக்கவே முடியாது. இதற்காகவே முகமூடி அணிந்து பைக்கில் செல்வதாக தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளார்.