பிரபல நடிகை விஜயலட்சுமி துக்கிட்டு தற்கொலை - அதிர்ச்சியில் திரையுலகம்!
பிரபல நடிகை விஜயலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மல்லிகா ராஜ்புத் (எ) விஜயலட்சுமி
உத்தரப்பிரதேசம், சுல்தான்பூரைச் சேந்தவர் விஜயலட்சுமி என்ற மல்லிகா ராஜ்புத்(35). நடிகை மற்றும் பின்னணி பாடகியாக வலம் வந்தவர். 2014ல் கங்கனா ரனாவத் நடித்த 'ரிவால்வர் ராணி' படத்தில் துணை வேடத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.
நடிப்பு, பாடலைத் தவிர அரசியலிலும் ஈடுபட்டு வந்தார். 2016-ம் ஆண்டு பாஜகவில் சேர்ந்தார், ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கட்சியை விட்டு வெளியேறினார். 2022ல் பாரதிய சவர்ண சங்கத்தின் தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
தூக்கிட்டு தற்கொலை
இந்நிலையில், அவரது வீட்டில் உள்ள அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்திருந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீஸில் புகாரளித்தனர். உடனே விரைந்த போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.
தொடர்ந்து முதற்கட்ட தகவலின் படி தற்கொலையாக இந்த மரணம் இருக்குமென கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து மல்லிகா ராஜ்புத்தின் தாயார் கூறுகையில், “நாங்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்ததால், மல்லிகாவின் மரணம் எப்போது நடந்தது என்று தெரியவில்லை” என்றார்.
அவர் திடீரென உயிரிழந்தது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.