இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்!
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
விஜய் ஆண்டனி
தமிழ் திரையுலகில் பிரபல இசையமைப்பாளராகவும், பாடகராகவும் இருப்பவர் விஜய் ஆண்டனி. காதலில் விழுந்தேன், டிஸ்யூம், வேட்டைக்காரன், அங்காடித் தெரு உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து பிரபலமடைந்தார்.
அதுமட்டுமல்லாமல் நடிகராகவும் களமிறங்கி நான், காளி, பிச்சைக்காரன், சைத்தான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். விஜய் ஆண்டனி தனது குடும்பத்தினருடன் சென்னை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இவரது மகள் மீரா, சென்னை சர்ச் பார்க் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார்.
தற்கொலை
இந்நிலையில் லாரா இன்று அதிகாலை 3 மணியளவில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்ததில், வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் திரைத்துறையில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக லாரா மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.