பின்னழகு அறுவை சிகிச்சையால் பிரபல நடிகை மரணம் - ரசிகர்கள் ஷாக்!

Argentina
By Sumathi Sep 02, 2023 12:05 PM GMT
Report

பின்னழகு அறுவைச் சிகிச்சை செய்து கொண்டதன் காரணமாக பிரபல நடிகை உயிரிழந்துள்ளார்.

சில்வினா லூனா

அர்ஜென்டினாவைச் சேர்ந்தவர் சில்வினா லூனா(43). பிரபல நடிகையாகவும், மாடலாகவும் வலம் வந்தார். 2011ல் பிரேசிலியன் பட் லிப்ட் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

பின்னழகு அறுவை சிகிச்சையால் பிரபல நடிகை மரணம் - ரசிகர்கள் ஷாக்! | Famous Actress Who Died Due To Butt Lift Surgery

இதன் காரணமாக சிறுநீரக பிரச்சனைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து, 79 நாட்களாக சிகிச்சையில் இருந்தார்.

மறைவு

இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இவரது அறுவை சிகிச்சையினை ஒப்பனை அறுவை சிகிச்சை நிபுணர் அனிபால் லோடோக்கி செய்துள்ளார். பாலிமெதில்மெதக்ரிலேட் கொண்ட திரவத்தை செலுத்தியுள்ளார்.

பின்னழகு அறுவை சிகிச்சையால் பிரபல நடிகை மரணம் - ரசிகர்கள் ஷாக்! | Famous Actress Who Died Due To Butt Lift Surgery

இது அர்ஜென்டினாவின் மருந்துகள், உணவு மற்றும் மருத்துவ தொழில்நுட்பத்தின் தேசிய நிர்வாகத்தால் தடைசெய்யப்பட்ட ஒன்று. இது குறித்து மருத்துவர் தெரிவிக்கையில், ‘இது போன்ற அறுவை சிகிச்சைகளால் முதலில் நோய் எதிர்ப்பு ஏற்பட்டு, சிறுநீரக செயலிழந்து இறுதியில் நோயாளிகள் இறக்கின்றனர்’ எனக் கூறினார்.