ஸ்பூன்களை விழுங்கிய நபர் - அறுவைச் சிகிச்சையில் அதிர்ந்த மருத்துவர்கள்!

Uttar Pradesh Viral Photos
By Sumathi Sep 29, 2022 07:30 AM GMT
Report

ஒருவரின் வயிற்றில் இருந்து 63 ஸ்டீல் ஸ்பூன்கள் ஆபரேசன் மூலம் அகற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போதை பழக்கம்

உத்தரப் பிரதேசம், மன்சூர்பூர் பகுதியில் உள்ள பொபாடா கிராமத்தை சேர்ந்தவர் விஜய்(32). இவர் போதை பழக்கத்திற்கு அடிமையாக இருந்துள்ளார். எனவே, மறுவாழ்வு மையத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

ஸ்பூன்களை விழுங்கிய நபர் - அறுவைச் சிகிச்சையில் அதிர்ந்த மருத்துவர்கள்! | 63 Steel Spoons In Drug Addicts Stomach

அப்போது, அவருக்கு வயிற்று பகுதியில் வலி இருப்பதாக கூறியுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வயிற்றில் கட்டி ஏதேனும் இருக்கலாம் என சந்தேகித்துள்ளனர். அதன் பேரில் அறுவை சிகிச்சை செய்த போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது.

அதிர்ச்சி சம்பவம்

விஜயின் வயிற்றில் ஸ்பூன்கள் இருந்துள்ளன. அதனை 2 மணி நேரம் மேற்கொண்ட அறுவை சிகிச்சை மூலம் அகற்றி இருந்தனர். அவரிடம் மருத்துவர்கள் விசாரித்ததில் கடந்த ஓராண்டாக ஸ்பூன்களை விழுங்கி வருவதாக தெரிவித்துள்ளார்.

ஸ்பூன்களை விழுங்கிய நபர் - அறுவைச் சிகிச்சையில் அதிர்ந்த மருத்துவர்கள்! | 63 Steel Spoons In Drug Addicts Stomach

அவர் ஏன் அப்படி செய்தார் என்பது தெரியவில்லை. இருந்தாலும் அவருடன் தங்கியிருந்த நபர் ஒருவர் மறுவாழ்வு மையத்தில் வலுக்கட்டாயமாக அவர் ஸ்பூன்களை விழுங்க வற்புறுத்தப்பட்டார் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக புகார் ஏதும் கொடுக்கவில்லை என தெரிகிறது. தற்போது அறுவை சிகிச்சைக்கு பிறகு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.