மகனுக்கு ஆண்மை குறைவு - வாரிசுக்காக மருமகளுக்கு மாமனார் செய்த கொடூரம்!
உறவினர்களுடன் சேர்ந்து மாமனார், மருமகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை வேண்டும்
குஜராத், வதோதரா மாவட்டத்தைச் சார்ந்த 40 வயது பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. பெண்ணுக்கு 40 வயது ஆகிய நிலையில் கருவுறுதல் பிரச்சனை காரணமாக புதுமணத்தம்பதி மருத்துவரை அணுகியுள்ளனர்.
அப்போது கணவரின் விந்தணுவில் குறைபாடு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இயற்கையான முறையில் கருத்தரிக்க இயலாது என்றும், செயற்கை கருத்தரிப்பு முறையை முயற்சி செய்யலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
குடும்பத்தினர் கொடூரம்
ஆனால் குடும்பத்தினர் இதனை மறுத்துள்ளனர். தொடர்ந்து அந்த பெண்ணை மாமனார் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், எனக்கு குழந்தை வேண்டும் என்பதால் இது குறித்து நீ வெளியே கூறக்கூடாது என கணவர் மிரட்டியுள்ளார்.
இதற்குப் பின்னும் பெண் கருத்தரிக்கவில்லை. இதனால் குடும்பத்திற்கு வாரிசு வேண்டும் என கணவரின் தங்கை கணவர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதில் அந்த பெண் கர்ப்பமாகி, கரு கலைந்துள்ளது. இதனையடுத்து பெண் போலீஸில் புகாரளித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.