தொடர் பவர் கட்; ஏடிஎம்-ல் தஞ்சம் அடைந்த குடும்பம் - வைரலாகும் வீடியோ
உபி குடும்பம் ஒன்று ஏடிஎம்-ல் தஞ்சம் அடைந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
தொடர் மின் வெட்டு
உத்தரப்பிரதேசம், ஜான்சி பகுதியில் வசித்துவரும் ஜெயந்தி குஷ்வாஹா என்ற பெண் தனது 10, 14 மற்றும் 16 வயதுடைய மூன்று சிறுவர்களுடன் ஒரு ஏடிஎம் மையத்திற்குள் தஞ்சம் அடைந்துள்ளார்.
இவர்களுடன் மற்றொரு பெண்ணும் அந்த ஏடிஎம் மையத்தில் ஓய்வெடுக்கிறார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.
ஏடிஎம்-ல் தஞ்சம்
இதுகுறித்து அவர் கூறுகையில், “நாங்கள் எங்கே செல்வது? குறைந்தபட்சம் இங்கே மின்சாரம் இருப்பதால் நாங்கள் இங்கே இருக்கிறோம். இரவு, பகல் என எப்போதும் எங்களுக்கு மின்சாரம் இல்லை.
In UP's Jhansi, locals struggling with massive power cuts for the past month have now sought refuge at an ATM. pic.twitter.com/hszYyc67pN
— Piyush Rai (@Benarasiyaa) May 20, 2025
எனவே, நான், என் முழு குடும்பத்துடன், வெப்பத்திலிருந்து சிறிது ஓய்வு பெற இங்கே ஓய்வெடுக்கிறேன். மின்சாரத் துறையினரும் எங்களுக்கு எந்த முறையான தகவலையும் கொடுப்பதில்லை.
என்னால் என் குழந்தைகளை வீதிகளில் உறங்க வைக்க முடியாது. எனவே நாங்கள் இங்கே ஏடிஎம்மில் இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தற்போது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.