அம்பானி வீட்டில் தினமும் தயாராகும் 4,000 ரொட்டிகள் - 600 ஊழியர்கள் - வியக்கவைக்கும் சம்பளம்
அம்பானி வீட்டில் 600 ஊழியர்கள் பணிபுரிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
600 ஊழியர்கள்
இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் முகேஷ் அம்பானி. இவரது இல்லமான அன்டிலியா மிகவும் பிரபலம். இந்த வீட்டின் மதிப்பு மட்டும் ரூ.15 ஆயிரம் கோடி. இங்கு ஹெலிபேடு, தனியாக மருத்துவமனை என வீட்டில் அனைத்து வசதிகளும் உள்ளன.
இங்கு சுமார் 600 ஊழியர்கள் பணிபுரிந்து வருவதாகவும், அவர்களுக்காக நாளொன்றுக்கு சுமார் 4,000 ரொட்டிகள் தயாரிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
பல சலுகைகள்
இவர்களுக்கு சமைப்பதற்கென அதிநவீன சமையல் உபகரணங்கள் மற்றும் திறமையான சமையல் கலைஞர்கள் குழு அங்கு உள்ளனர். இதில் அதிக சம்பளம் பெறும் தனிப்பட்ட சமையல்காரர், குடும்பத்தினரின் உணவு விருப்பங்களையும், தரத்தையும் கவனித்துக்கொள்வார் எனக் கூறப்படுகிறது.
ஆண்டுக்கு கிட்டத்தட்ட ரூ.24 லட்சம் சம்பளம் முகேஷ் அம்பானியின் டிரைவர் பெறுகிறார். முகேஷ் அம்பானியின் வீட்டில் பாதுகாவலர்களுக்கு மாதம் ரூ.14,536 முதல் 55,869 வரை சம்பளமாக வழங்கப்படுகிறது.
நல்ல சம்பளம் மட்டுமின்றி மெடிக்கல் இன்சூரன்ஸ் உள்பட பல சலுகைகளும் அளிக்கப்படுகிறது.