தலைவிரித்தாடும் பஞ்சம் - தண்ணீரை வீணடித்த குடும்பம் - 1.1 லட்ச அபராதம் வசூல்
பெங்களூரு நகரம் தண்ணீர் பஞ்சத்தால் பெரும் இன்னல்களை சந்தித்துள்ளது.
தண்ணீர் பஞ்சம்
நாட்டின் தகவல்தொழில்நுட்பத் தலைநகரம் என குறிப்பிடப்படும் பெங்களுரு நகரம் தற்போது தண்ணீர் பஞ்சத்தால் பெரும் இன்னலை சந்தித்து வருகின்றது.
மக்கள் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாத சூழலில் பல ஐ.டி நிறுவனங்களும் பணிபுரிவோருக்கு Work from home முறையை அளித்து பணியிடத்தை காலி செய்து வருவதாக செய்திகள் தொடர்ந்து வெளிவருகின்றன.
தண்ணீர் விலையும் கடுமையாக அதிகரித்துள்ளது. வழக்கமான நாட்களில் தண்ணீர் டேங்கர் கட்டணம் ரூ.700 முதல் ரூ.800 வரை இருந்ததை தாண்டி தற்போது சுமார் ரூ.1500 ரூபாய்க்கும் அதிகமாக கேட்பதாக கூறப்படுகிறது.
1.1 லட்ச ரூபாய்
இதனை தொடர்ந்து தான், தனியார் குடியிருப்புகளில் தாங்கி இருப்போர் வீணாக தண்ணீரை செலவு செய்தால், அவர்களுக்கு ஃபைன் அதாவது அபராதம் விதிக்கப்படும் என பெங்களூரு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் அறிவித்திருந்தது.
இந்த எச்சரிக்கையையும் மீறி, தண்ணீரை வீணடித்த 22 குடும்பங்களிடம் இருந்து சுமார் 1.1 லட்ச ரூபாய் அதாவது குடும்பத்திற்கு 5 ஆயிரம் அபராதம் விதம் வசூலிக்கப்பட்டுள்ளது. நகரே தண்ணீர் பஞ்சத்தால் தவித்து வரும் சூழலில், இந்த கடும் நடவடிக்கைகள் தேவையே என பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.