கர்ப்பம் என ஏமாற்றம்.. பல ஆயிரங்களை சுருட்டிய மருத்துவமனை - அதிர்ச்சி சம்பவம்!

Pregnancy Andhra Pradesh Crime
By Sumathi Sep 26, 2022 05:32 AM GMT
Report

கர்ப்பமாக இருப்பதாக கூறி, மருத்துவமனை பணத்தை ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்ப்பம்?

ஆந்திரா, கிழக்கு கோதாவரி மாவட்டம், கோகாவரை சேர்ந்தவர் மகாலட்சுமி. இவருக்கு, புதுச்சேரி மாநிலம் யானத்தை சேர்ந்த வி.சத்தியநாராயணா என்பவருடன் திருமணம் நடந்தது. கடந்த ஜனவரி மாதம் இவர் தனது மனைவியை காக்கிநாடா காந்திநகரில் உள்ள ரம்யா மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து வந்துள்ளார்.

கர்ப்பம் என ஏமாற்றம்.. பல ஆயிரங்களை சுருட்டிய மருத்துவமனை - அதிர்ச்சி சம்பவம்! | False Preganancy Treatment At Private Hospital

அதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். அதனையடுத்து மகாலட்சுமி அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து வந்துள்ளார். இதற்காக அதிகமாக ஆயிர கணக்கில் செலவும் செய்து வந்துள்ளார்.

 உண்மை இல்லை

ஆறாவது மாதத்தில் ஸ்கேன் எடுக்கப்பட்டு, செப்டம்பர் 22-ம் தேதி பிரசவம் இருக்கும் என கூறியுள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் மகாலட்சுமிக்கு அவரது பெற்றோர் வளைகாப்பு நடத்தி தங்களது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

கர்ப்பம் என ஏமாற்றம்.. பல ஆயிரங்களை சுருட்டிய மருத்துவமனை - அதிர்ச்சி சம்பவம்! | False Preganancy Treatment At Private Hospital

பின்னர் ராஜமுந்திரியில் உள்ள அரசு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஸ்கேன் எடுத்து பார்த்தபோது மகாலட்சுமி கர்ப்பமாக இல்லை என்று கூறியுள்ளனர். அதிர்ச்சியடைந்த மகாலட்சுமி தனது கணவருக்கு தெரிவித்துள்ளார்.

 ஏமாற்றிய மருத்துவமனை

உடனே அவர்கள் ஏற்கனவே சென்ற மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்க வற்புறுத்தியுள்ளனர். அதில் கர்ப்பமாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து மருத்துவரிடம் இதுகுறித்து கேட்ட போது அவர் சரியான தகவல் அளிக்காமல் இருந்துள்ளார்.

குழந்தை ஆரோக்கியமாக இருக்கவும் குழந்தை வளர்ச்சிக்கு என மாதந்தோறும் மருந்துகளை எழுதிக் கொடுத்தனர். அவற்றைப் பயன்படுத்திய பின் எனது மகளின் வயிறு பெரிதாகிவிட்டதாகவும் மகாலட்சுமி தாய் கமலா தேவி வேதனையுடன் தெரிவித்தார்.

கடும் கண்டனம் 

பணம் பறிக்க இதுபோன்ற செய்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு மகளிர் சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் இதற்கு மருத்துவமனை நிர்வாகத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தங்கள் மருத்துவமனை மீது அவப்பெயரை ஏற்படுத்துவதற்காக இது போன்று செய்வதாகவும் பலமுறை ஸ்கேன் எடுக்க வேண்டும் என கூறியும் அவர்கள் ஸ்கேன் எடுக்க முன்வரவில்லை.

இந்நிலையில் தற்பொழுது வயிற்றில் குழந்தை இல்லை என இறுதியாக எடுக்கப்பட்ட ஸ்கேனிங்கில் தெரிய வந்துள்ளது. பிரசவ தேதி நாங்கள் கூறவில்லை என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.