கீழே விழுந்த ரசிகர்..பதறிப்போன நயன்தாரா..!

Nayanthara Vignesh Shivan Marriage
By Thahir Jun 11, 2022 11:17 AM GMT
Report

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி திருமணத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்திக்க வந்த நிலையில் ரசிகர் ஒருவர் கீழே விழுந்த நிலையில் நயன்தாரா பதறிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

திருமணம்

விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த 2015 ஆம் ஆண்டு நானும் ரவுடி தான் படத்தில் இணைந்து பணியாற்றியதில் இருந்து காதலித்து வந்தனர்.

கீழே விழுந்த ரசிகர்..பதறிப்போன நயன்தாரா..! | Fallen Fan Nayanthara Caught

கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த 9-ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்தில் ரஜினிகாந்த்,ஷாருக்கான்,அட்லி,உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இவர்களின் திருமணத்தை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களில் ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் கொடுக்கப்பட்டது.

திருமணத்திற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த விக்னேஷ் சிவன் திருணமத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்திப்பதாக தெரிவித்திருந்தார்.

பதறிப்போன நயன்தாரா

இதையடுத்து நட்சத்திர ஓட்டலில் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர் விக்னேஷ் சிவன்,நயன்தாரா ஜோடி கழுத்தில் தாலியுடன் மஞ்சள் நிற சேலையில் மங்களகரமாக வந்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.

பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு வந்த போது ரசிகர் ஒருவர் கீழே தவறி விழுந்ததை பார்த்த நடிகை நயன்தாரா பதறிய நிலையில் பார்த்து பார்த்து என கூறினார். தற்போது இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.