மனைவியை வேறொருவருக்கு திருமணம் செய்து வைத்த புரோக்கர் - பலே மோசடி!
நபர் ஒருவர் பணத்திற்காக தனது மனைவியை வேறொருவருக்கு திருமணம் செய்துவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள பெண்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பாப்பனூத்து பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (29). இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில், தகராறு காரணமாக அவரது மனைவி பிரிந்து சென்றுள்ளார்.

இதனையடுத்து அவருக்கு மறுமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் பெண் பார்த்து வந்தனர். அப்போது கேரளாவை சேர்ந்த திருமண புரோக்கர் ஒருவர் ராதாகிருஷ்ணனை அணுகி, அம்மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண்ணின் புகைப்படத்தை காண்பித்தார். இந்த பெண்ணை அவருக்கு பிடித்துப்போக தடபுடலாக ராதாகிருஷ்ணனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
அப்போது அந்த பெண்ணின் வீட்டில் வசதி இல்லாததால் உதவி செய்யும்படி புரோக்கர் கேட்டுக்கொண்டுள்ளார். இதனை ஏற்று மாப்பிள்ளை வீட்டார் அந்த பெண்ணுக்கு 1½ பவுனில் நகை மற்றும் புரோக்கருக்கு ரூ.80,000 கமிஷனும் கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து இவர்களுக்கு திருமணம் நடைபெற்று முதலிரவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
திருமண மோசடி
அப்போது புதுப்பெண் தனக்கு மாதவிடாய் என்றும், இன்னொரு நாள் வைத்துக் கொள்வோம் என்றும் ராதாகிருஷ்ணனிடம் கூறி முதலிரவை தவிர்த்துவிட்டார். பின்னர் மறுநாள் தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லாததால் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும்,

அவரை பார்க்க செல்ல வேண்டும் என்று ராதாகிருஷ்ணனிடம் தெரிவித்துள்ளார். இதனால் அவர் தனது மனைவியை பொள்ளாச்சிக்கு அழைத்துச்சென்றுள்ளார். அங்கு சென்றதும் அந்த பெண் திடீரென மாயமாகியுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால், இதுகுறித்து தாராபுரம் காவல்நிலையத்தில் ராதாகிருஷ்ணன் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், நகை மற்றும் பணத்திற்காக ராதாகிருஷ்ணனை ஏமாற்றி கேரள பெண் திருமணம் செய்துகொண்டதும், அந்தப் பெண்ணின் கணவர் தான் திருமண புரோக்கர் போல் செயல்பட்டுள்ளார் என்பதும் தெரியவந்தது.
இந்த தம்பதிக்கு ஒரு குழந்தையும் உள்ளது. மேலும், இதேபோல வேறு வாலிபர்களிடமும் அந்த தம்பதி நூதன திருமண மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் போலீசார் திருமண புரோக்கரையும், அவரது மனைவியையும் தேடி வருகின்றனர்.
Siragadikka Aasai: கையை நீட்டி ரோகினியை காட்டிக் கொடுத்த க்ரிஷ்... அதிர்ச்சியில் உறைந்த குடும்பம் Manithan