5 ஆண்டுகளாக போலி நீதிமன்றம் நடத்தி தீர்ப்பு வழங்கிய நபர் - எங்கு தெரியுமா?

Gujarat Crime
By Sumathi Oct 23, 2024 08:15 AM GMT
Report

5 ஆண்டுகளாக போலி நீதிமன்றம் நடத்திய போலி நீதிபதி கைது செய்யப்பட்டுள்ளார்.

போலி நீதிமன்றம் 

குஜராத்தில், பாபுஜி என்பவர் 50 ஆண்டுகளாக ஒரு இடத்தில் குடியிருப்பதால், அந்த இடத்தை தனது பெயருக்கு மாற்றி தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்து, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மோரிஸ் சாமுவேல்

இவரிடம் இருந்து பெரும் தொகையை பெற்றுக் கொண்ட போலி நீதிபதி சாமுவேல், பாபுஜிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளார். தொடர்ந்து இந்த தீர்ப்பை அகமதாபாத் ஆட்சியரிடம் பாபுஜி வழங்கிய நிலையில், அதன் மீது ஆட்சியர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

மமதையில் உள்ள பாஜகவின் பாசிச ஆட்சி வீழட்டும், இந்தியா வெல்லட்டும்! முதல்வர் மு.க ஸ்டாலின்!

மமதையில் உள்ள பாஜகவின் பாசிச ஆட்சி வீழட்டும், இந்தியா வெல்லட்டும்! முதல்வர் மு.க ஸ்டாலின்!

போலி நீதிபதி கைது

இந்நிலையில், போலி நீதிமன்றம் அளித்த தீர்ப்பு நகலை அகமதாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில் பாபுஜி மனு தாக்கல் செய்துள்ளார். அப்போதுதான், அந்த தீர்ப்பு நகலை பார்த்து சந்தேகம் அடைந்த நீதிமன்ற பதிவாளர் போலீசில் புகார் அளித்த நிலையில்,

5 ஆண்டுகளாக போலி நீதிமன்றம் நடத்தி தீர்ப்பு வழங்கிய நபர் - எங்கு தெரியுமா? | Fake Judge Running A Court For 5 Years Gujarat

போலீசார் நடத்திய விசாரணையில் அது போலி நீதிமன்றம் என்றும் தீர்ப்பளித்தவர் போலி நீதிபதி என்றும் தெரியவந்துள்ளது. சாமுவேலின் நடவடிக்கைகள் உண்மை எனத் தோன்ற வைப்பதற்காக அவரது கூட்டாளிகளே வழக்கறிஞர்களாகவும், நீதிமன்ற ஊழியர்கள் போலவும் செயல்பட்டுள்ளனர்.

தற்போது சாமுவேல் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு போலி நீதிமன்றத்தை நடத்தியதை கண்டுபிடிக்க முடியாமல் காவல் துறையும், அரசு அதிகாரிகளும் இருந்த இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.