அப்படியே ஒரிஜினல் போல - ஆனா போலி..! திமுக IT துணைச் செயலாளருக்கே இப்படியா..?

Tamil nadu DMK Chennai
By Karthick Dec 13, 2023 12:48 PM GMT
Report

திமுகவின் IT அணியின் துணை செயலாளர் பத்ம பிரியாவின் பெயரில் போலி ட்விட்டர் அக்கவுண்ட் உள்ளது அவருக்கே அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

பத்ம பிரியா

சென்னை தமிழச்சி என்ற பெயரில் சமூக வலைதளங்களில் இயங்கிவந்த பத்மபிரியா இவர் 2021-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளராக மதுரவாயல் தொகுதியில் களமிறங்கி தோல்வியடைந்தார்.

fake-account-in-the-name-of-dmks-padma-priya

பின்னர் அக்கட்சியில் இருந்து விலகிய பத்மபிரியா திமுகவில் இணைந்தார். இளம் வயதிலேயே சமூக பணிகளில் தீவிர காட்டி வரும் இவருக்கு திமுகவில் தகவல் தொழில்நுட்ப துறையின் துணைச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

வெள்ள நிவாரணம் - எந்தெந்த வட்டங்களுக்கும்..யாரு யாருக்கு வழங்கப்படும்..? வெளியான அரசாணை

வெள்ள நிவாரணம் - எந்தெந்த வட்டங்களுக்கும்..யாரு யாருக்கு வழங்கப்படும்..? வெளியான அரசாணை

போலி கணக்கு

இந்நிலையில், பத்மபிரியா பெயரில் போலி கணக்கு ஒன்று மர்மநபர் ஒருவரால் தொடங்கப்பட்டது. இதில் தன்னுடைய ஒரிஜினல் ஐடியை சங்கிகள் முடக்கிவிட்டதாகவும் தன்னுடைய ஒரிஜினல் ஐடியை ரிப்போர்ட் அடிக்குமாறும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பத்ம ப்ரியா ட்விட்டரில் போலி ஐடி குறித்து அறிய வேண்டும் என்பதை பதிவிட்டுள்ளார். இது குறித்து அவரே வெளியிட்டுள்ள பதிவில், BEWARE of this Fake ID என குறிப்பிட்டுள்ளார். மாநிலத்தில் ஆளும் கட்சியான திமுகவின் IT பிரிவை சேர்ந்த துணை செயலாளருக்கே இந்த நிலைமையா? என பலரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.