மூளை சம்மந்தப்பட்ட அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள பகத் பாசில்? ரசிகர்கள் அதிர்ச்சி!
மலையாள நடிகர்களில் தற்போது தமிழ் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவராக இருக்கின்றார் பகத் பாசில்.
பகத் பாசில்
தமிழில் சிவகார்த்திகேயனின் "வேலைக்காரன்" படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் அறிமுகனாவார் பகத் பாசில். முதல் படத்தில் பெரிய தடம் அவர் பாதிக்கவிலை என்றாலும், மலையாளத்தில் அதற்கு முன்பாகவே முன்னணி நாயகனாக முன்னேறினர்.
முதலில் நஸ்ரியாவின் கணவராக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர், தற்போது தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை நாடெங்கிலும் உருவாக்கியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் அடுத்தடுத்து நடித்து வரும் அவரின் அண்மை படமான "ஆவேசம்" பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது வடிவேலுவுடன் தமிழில் ஒரு படம், பெரும் எதிர்பார்ப்புகளை கொண்டு புஷ்பா 2 படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் பகத் பாசில்.
குறைபாடு
நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், அதற்கு வருகை தந்திருந்த மருத்துவர் ஒருவரிடம் ADHD எனப்படும் ஹைபராக்டிவிட்டி கோளாறு எனப்படும் குறைபாடே எளிதில் குணப்படுத்த முடியுமா? என கேட்டார்.
சிறுவயதிலேயே கண்டறியப்பட்டால் அதை குணப்படுத்துவது எளிது என மருத்துவர் பதிலளிக்க, 41 வயதுள்ளவருக்கு எப்படி என கேட்டார் பகத் பாசில். இது மூலம் அவருக்கு தான் அந்த பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என சமூகவலைத்தளங்களில் கருத்துக்கள் வேகமெடுத்துள்ளன.
நரம்பியல் தொடர்பான ஒரு குறைபாடான இந்த ADHD, அதிக மறதியை உண்டாக்கும்.