நிறைய பாத்துட்டேன்...நானும் கணவரும்!!விவாகரத்து பெறும் நமீதா?? பரபரப்பு பேட்டி

Namitha Divorce
By Karthick May 28, 2024 08:11 AM GMT
Report

நடிகை நமீதா விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல் வெளியானது.

நமீதா

தமிழ் திரையில் அறிமுகமான சில காலகட்டத்திலேயே ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார் நமீதா. 2004-ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான "எங்கள் அண்ணா" படத்தில் தமிழ் திரையில் அறிமுகமான நமீதா, அப்படத்திற்கு முன்பாகவே தெலுங்கில் வெற்றி பட நாயகியாக இருந்தார்.

Actress Namitha

தொடர்ந்து தமிழிலும் சிறப்பான வரவேற்பு கிடைக்க குறுகிய காலகட்டத்திலேயே அடுத்தடுத்த படங்களில் இருமொழிகளிலும் மாறி மாறி நடித்தார்.

சரத்குமார், சத்யராஜ், அர்ஜுன், விஜய், அஜித் என முன்னணி நாயகர்களுடன் நடித்தவர் இந்தி, கன்னட, மலையாளம், ஆங்கிலம் மொழி படங்களிலும் வரிசையாக நடிக்க துவங்கினார்.

Actress Namitha

கொஞ்ச காலகட்டத்தில் உடல் எடை அதிகரித்ததன் காரணமாக, பட வாய்ப்புகளை இழந்தார். அதனை தொடர்ந்து சில படங்களில் நடித்தவர், பின்னர் 2017-ஆம் ஆண்டு வீரேந்திர சவுதிரி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

Actress Namitha Mariiage

தற்போது திரைப்படங்களில் இருந்து சற்று விலகியிருக்கும் நமீதா, தீவிர அரசியலில் பாஜகவில் இணைந்து பணியாற்றி வருகின்றார். நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவிற்கு ஆதரவாக வாக்குகளை சேகரித்து வந்தார்.

விவாகரத்து

இந்த நிலையில் தான் அண்மைக்காலமாக இவர், கணவரை விவாகரத்து செய்யவுள்ளார் என்ற செய்திகள் அதிகளவில் வெளியாகின. இது குறித்து அவர் விளக்கம் ஒன்றையும் கொடுத்துள்ளார்.

தனுஷ் படம்...நடந்த மோசமான சம்பவம் - என்னோட worst experience அது தான் - நமீதா!!

தனுஷ் படம்...நடந்த மோசமான சம்பவம் - என்னோட worst experience அது தான் - நமீதா!!

இந்த வதந்தி வருவதற்கு சில நாட்களுக்கு முன்னர் தான் கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்ததாக குறிப்பிட்ட நமீதா, இருப்பினும் தாங்கள் விவாகரத்து செய்து விட்டதாக இப்படி ஒரு வதந்தி வந்ததாக கூறினார்.

Actress Namitha divorce news

எதன் அடிப்படையில் இது போன்ற செய்திகளை வெளியிடுகிறார்கள் என்பதே தெரியவில்லை என வேதனை தெரிவித்த நமீதா, சினிமாவில் நடிகையாக பல வதந்திகளை பார்த்தால், இதனை தானும் கணவரும் இதனை குறித்து கவலைப்படவில்லை என்றார்.