தனுஷ் படம்...நடந்த மோசமான சம்பவம் - என்னோட worst experience அது தான் - நமீதா!!
தமிழ் சினிமாவில் இன்றளவும் தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளவர் நடிகை நமீதா.
நமீதா
தமிழ் சினிமாவில் அறிமுகமான சில படங்களிலேயே ரசிகர்களை பெருமளவில் கவரந்தவர் நமீதா. தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்துள்ளார்.
விஜய், அஜித் என தமிழ சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள நமீதா, உடல் எடை அதிகரித்ததன் காரணமாக, பட வாய்ப்புகள் இல்லாமல் போனார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ள அவர், கடந்த 2017-ஆம் ஆண்டு வீரேந்திர சவுதரி என்பவரை திருமண செய்து கொண்டார். அவருக்கு கடந்த 2022-ஆம் ஆண்டு இரட்டை குழந்தைகள் பிறந்தன.
தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் அவர், 2019-ஆம் ஆண்டு முதல் பாஜக கட்சியில் பணியாற்றி வரும் அவர், அக்கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு உறுப்பினராகவும் இருக்கின்றார்.
தனுஷ் படம்'னு சொல்லி
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது worst cinema experience'ஐ பகிர்நது கொண்டுள்ளார். அவர் கூறியது வருமாறு, ஒரு படம் 2006'ல நான் பெயர் சொல்ல மாட்டேன்.
அந்த producer முதல் படம் அது. என்னிடம் உங்களுக்கு ஜோடியாக தனுஷ் நடிக்க போகிறார் என்று சொல்ல நான் படம் sign பண்ணிட்டேன்.
ஆனா, அதுக்கப்புறம் producer அண்ணா இல்ல அவரோட பையன் ஹீரோவா பண்ணாங்க. நான் பாதி படத்துல விட்டுட்டேன். நான் producer கவுன்சில், actor கவுன்சில complain பண்ணேன்.ஆனா அவுங்க somehow படம் ரிலீஸ் பண்ணிட்டாங்க.