சோனியா காந்தி குறித்து பலரும் அறிந்திடாத சுவாரஸ்யமான உண்மைகள்!

Indian National Congress Sonia Gandhi Delhi
By Sumathi Jan 08, 2023 11:02 AM GMT
Report

அரசியலைத் தாண்டி, சோனியா காந்தி குடும்பத் தலைவியாக, மருமகளாக அவர் எப்படிப்பட்டவர், அவருடைய ரசனைகள் குறித்து இதில் தெரிந்து கொள்வோம்.

சோனியா காந்தி

சோனியா காந்தியின் இயற்பெயர் எட்விஜ் அன்டோனியா அல்பினா மைனோ. இவர் 09 டிசம்பர் 1946. இல் இத்தாலியில் உள்ள வெனட்டோவின் லூசியானாவில் ஸ்டெபனோ மற்றும் பவுலா மைனோ ஆகியோருக்கு மகளாக பிறந்தார். இவருக்கு இரண்டு சகோதரிகள் உண்டு. அவரது தந்தை கட்டுமான வணிகம் செய்து வந்தார். அன்டோனியா ஒரு பாரம்பரிய ரோமன் கத்தோலிக்க சபையை சேர்ந்தவர்.

சோனியா காந்தி குறித்து பலரும் அறிந்திடாத சுவாரஸ்யமான உண்மைகள்! | Facts About Sonia Gandhi In Tamil

இதனால் இவர் கத்தோலிக்க பள்ளியில் படித்தார். 1964 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள பெல் கல்வி அறக்கட்டளையின் மொழி பள்ளியில் சேர்ந்தார். கல்லூரி மாணவியாக இருந்தபோதே கேம்ப்ரிட்ஜில் உள்ள வர்சிட்டி ரெஸ்டாரண்ட் என்ற உணவகத்தில் பணியாளராக வேலைப்பார்த்து வந்தார். அந்த உணவகத்தில் வேலைப்பார்க்கும்போது அவர் நேரு- காந்தி என்ற சக்திவாய்ந்த குடும்பத்தின் வாரிசான ராஜீவ் காந்தி என்னும் இளம் இந்தியருடன் பழக்கம் உண்டானது.

காதல்

அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் இயந்திர பொறியியல் மாணவராக இருந்தார். இருவரும் காதலித்து திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்தனர். ஆன்டோனியா மைனோ 1968 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தியை மணந்துக்கொண்டார். பிறகு அவர் தனது பெயரை சோனியா காந்தி என்று மாற்றிக்கொண்டார்.

சோனியா காந்தி குறித்து பலரும் அறிந்திடாத சுவாரஸ்யமான உண்மைகள்! | Facts About Sonia Gandhi In Tamil

அப்போதைய இந்தியாவின் பிரதமராக இருந்த அவரது மாமியார் இந்திரா காந்தியை சந்தித்தார். இவர்களுக்கு ராகுல் மற்றும் பிரியங்கா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

சோனியா காந்தி குறித்து பலரும் அறிந்திடாத சுவாரஸ்யமான உண்மைகள்! | Facts About Sonia Gandhi In Tamil

முக்கியமான அரசியல் குடும்பத்தை சேர்ந்தவராக ராஜீவ் காந்தி இருந்தாலும் அவர் அரசியலில் அதிக ஆர்வம் காட்டவில்லை. அவர் பொறியியலிலும் ஆர்வம் காட்டவில்லை. அவர் உண்மையில் வானத்தில் பறக்க விரும்பினார். இதனால் அவர் ‘இந்தியன் ஏர்லைன்ஸில்’ ஒரு வணிக விமானியாக ஆனார். அதே நேரத்தில் சோனியா ஒரு இல்லதரசி ஆனார். அதனால் இந்த ஜோடி அரசியல்க்குள் வரவில்லை. இந்திரா காந்தியின் இளைய மகனான சஞ்சய் தனது தாயை பின்பற்றி அரசியலுக்கு வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

அரசியல் 

ஆனால் 1980 இல் நடந்த விமான விபத்தில் சஞ்சய் இறந்தார். இதனால் இந்திரா காந்தி ராஜீவ் காந்தியை அரசியலுக்கு வர சொல்லி அழுத்தம் கொடுத்தார். ஆனால் ராஜீவ் காந்தி, சோனியா காந்தி இருவருக்குமே இதில் விருப்பம் இல்லை. இருப்பினும் ராஜீவ் காந்தி சிறிய தயக்கத்துடன் அரசியலில் நுழைய ஒப்புக்கொண்டார். 1984 இல் பிரதமரான இந்திராகாந்தி படுக்கொலை செய்யப்பட்டார். அவருக்கு பிறகு ராஜீவ் காந்தி பிரதமராக பதவியேற்றார்.

சோனியா காந்தி குறித்து பலரும் அறிந்திடாத சுவாரஸ்யமான உண்மைகள்! | Facts About Sonia Gandhi In Tamil

பிரதமரின் மனைவியான சோனியாவுக்கும் அரசியலில் ஈடுபடுவதை தவிர வேறு வழி இல்லை. பிறகு ராஜீவ் காந்தி 1991 இல் படுக்கொலை செய்யப்பட்டார். இதனால் அவரது மனைவியான சோனியா அரசியல் வாரிசாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு காங்கிரஸ் கட்சியின் தலைமை வழங்கப்பட்டது. ஆனால் அவர் அதை மறுத்து அரசியலில் இருந்து விலக முடிவு செய்தார். காங்கிரஸிற்கு சரியான தலைமை இல்லாததை கண்ட அவர் அடுத்த ஆண்டில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார்.

 முக்கிய பொறுப்பு

1997 ஆம் ஆண்டு கல்கத்தா அமர்வில் காங்கிரஸின் முதன்மை உறுப்பினராக கட்சியில் சேர்ந்தார். 1998 இல் கட்சியின் தலைவரானார். 1999 இல் 13வது மக்களவையின் எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சி 2004 மக்களவை தேர்தலில் இருந்து மிகப்பெரும் ஒற்றை கட்சியாக உருவெடுத்தது. ஆனால் முழுமையான பெரும்பான்மையை பெறாததால் அந்த கட்சி பின்னர் ஐக்கிய முற்போக்கு கூட்டணி (யுபிஏ) என்ற புதிய கட்சியோடு கூட்டணியை உருவாக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

சோனியா காந்தி குறித்து பலரும் அறிந்திடாத சுவாரஸ்யமான உண்மைகள்! | Facts About Sonia Gandhi In Tamil

மேலும் அந்த கூட்டணி அரசாங்கத்தை வழி நடத்த சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். எப்படி இருந்தாலும் அவர் பிரதமராக இருக்க வேண்டாம் என்று முடிவு செய்தனர். எனவே பிரதமராக பணியாற்ற அவர்கள் முக்கிய பொருளாதார நிபுணரான மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுத்தார். 2004 ஆம் ஆண்டில் சோனியா காந்தி தேசிய ஆலோசனை குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். அதற்கு பிறகு 2005 ஆம் ஆண்டில் ‘தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம்’ மற்றும் ‘தகவல் அறியும் உரிமை சட்டம்’ ஆகியவற்றை இயற்றுவதில் இவர் முக்கிய பங்கு வகித்தார்.

கட்சியின் தலைவர்

இந்த நிலையில் சோனியா காந்தி மக்களவையில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அலுவலக ஆலோசனை தொடர்பான அந்த சர்ச்சையிக்கு பின்பு தேசிய ஆலோசனைக்குழு மார் 2006 ஆம் ஆண்டு தேசிய ஆலோசனை குழுவின் தலைவர் பதவியை அலுவலக இலாப நோக்கிற்குள் கொண்டு வர முடியாது என கூறிவிட்டது. இதனால் பின்னர் மீண்டும் இவர் 2010 இல் தேசிய ஆலோசனை குழுவின் தலைவரானார்.

சோனியா காந்தி குறித்து பலரும் அறிந்திடாத சுவாரஸ்யமான உண்மைகள்! | Facts About Sonia Gandhi In Tamil

சோனியா காந்தி மே 2006 இல் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2010 இல் தேசிய ஆலோசனை குழுவின் தலைவரான சோனியா காந்தி 2014 வரை தலைவராக பணிப்புரிந்தார். ஆனால் 2014 பொது தேர்தலின் போது அவரது கட்சி அதிகாரத்தை இழந்தது. தற்போது அவரது கட்சி இந்தியாவில் எதிர்கட்சியாக இருந்தாலும் இப்போதும் சோனியா காந்திதான் கட்சியின் தலைவராக இருக்கிறார்.

 சாதனை & விருது

2004 ஆம் ஆண்டு ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையால் சோனியா காந்தி உலகின் சக்திவாய்ந்த மூன்றாவது பெண்மணியாக அறிவிக்கப்பட்டார். 2006 ஆம் ஆண்டு பெல்ஜியம் அரசாங்கத்தால் ‘ஆர்டர் ஆஃப் லியோபோல்ட்’ என்னும் விருது அவருக்கு வழங்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டு ‘நியூ ஸ்டேட்ஸ்மேன்’ என்னும் பத்திரிக்கை உலகின் 50 செல்வாக்கு மிக்க நபர்களில் சோனியா காந்தியையும் மதிப்பிட்டுள்ளது. சோனியா காந்தியின் நிகர மதிப்பு சுமார் 2 பில்லியன் என கூறப்படுகிறது.

சோனியா காந்தி குறித்து பலரும் அறிந்திடாத சுவாரஸ்யமான உண்மைகள்! | Facts About Sonia Gandhi In Tamil

வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்வதில் அலாதி பிரியம் கொண்டவர். குறிப்பாக, வீட்டில் கட்சி மீட்டிங் நடப்பதாக இருந்தால், முன் தினமே வீட்டைச் சுத்தம் செய்து அலங்கரிப்பாராம். சோனியா நல்ல செஃப். கல்யாணமான புதிதில் குக்கரி புத்தகம் பார்த்துச் சமைக்க ஆரம்பித்தார். பின்னர், தன் மாமியாருக்குப் பிடித்த பாஸ்தா, கஜர்கா அல்வா வரை சமைக்கும் எக்ஸ்பர்ட் ஆகிவிட்டாராம். இந்திரா காந்தியை மம்மி என்றுதான் அழைப்பாராம். நாவல்கள் படிப்பது பிடித்த விஷயம்.

பெர்சனல் பக்கம்

குறிப்பாக, இந்தி மற்றும் உருது எழுத்தாளர் முன்ஷி பிரேம்சந்த் நாவல்கள் என்றால் கொள்ளைப் பிரியம். சோனியா காந்திக்கு பிரெஞ்ச், ஜெர்மன் உள்ளிட்ட 9 மொழிகள் தெரியும். சோனியா திருமணத்தின்போது அணிந்திருந்த பிங்க் கலர் காட்டன் புடைவையைத்தான், அவர் மகள் பிரியங்காவும் திருமணத்தின்போது கட்டியிருந்தார்.

சோனியா காந்தி குறித்து பலரும் அறிந்திடாத சுவாரஸ்யமான உண்மைகள்! | Facts About Sonia Gandhi In Tamil

அந்தப் புடைவையை அந்தளவுக்குப் பத்திரமாக வைத்திருக்கக் காரணம், நேரு தன் கையால் நெய்தது. நாள் தவறாமல் யோகா செய்வார். ஓவிய ஆர்வமிக்க இவர், பெயின்டிங் கோர்ஸ் முடித்துள்ளார். டெல்லி உறைபனிக் காலத்தில் தென்னிந்தியாவின் காபி குடிப்பது சோனியாவுக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்று. 

சோனியா காந்தி குறித்து பலரும் அறிந்திடாத சுவாரஸ்யமான உண்மைகள்! | Facts About Sonia Gandhi In Tamil