சுவாச குழாய் பாதிப்பு - சோனியா காந்தி மருத்துவமனையில் திடீர் அனுமதி!

Sonia Gandhi Delhi
By Sumathi Jan 05, 2023 07:13 AM GMT
Report

  காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சோனியா காந்தி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்திக்கு திடீரென மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து அவர், டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

சுவாச குழாய் பாதிப்பு - சோனியா காந்தி மருத்துவமனையில் திடீர் அனுமதி! | Sonia Gandhi Admitted In Hospital

இந்நிலையில் மருத்துவர் அரூப் பாசு தலைமையிலான மருத்துவக்குழு கண்காணித்து வருகிறது. சோனியா காந்திக்கு சுவாச குழாய் பகுதியில் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்காக உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சோனியா காந்திக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால்,

மருத்துவமனையில் அனுமதி

டெல்லியில் இருந்து உத்தரப்பிரதேசம் நோக்கி இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு சென்ற ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் 7 கிலோ மீட்டர் தூரம் சென்றுவிட்டு திரும்பியதாக கூறப்படுகிறது.

இதனால் நேற்று ஒற்றுமை யாத்திரை நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் பிரியங்கா காந்தி தனது தாயார் சோனியா காந்தியை உடனிருந்து கவனித்து கொள்கிறார்.