பிரியாணி சாப்பிட்டால் குழந்தை பிறக்காது.. அதிர்ச்சி தகவல் - நிலவரம் என்ன!

Pregnancy Healthy Food Recipes
By Sumathi Nov 05, 2022 09:49 AM GMT
Report

பிரியாணி சாப்பிட்டால் குழந்தை பிறக்காது என பெரும் வதந்தி பரவிய வண்ணம் உள்ளது.

பிரியாணி

இன்றைய சூழலில், இந்தப் பேரை சொன்ன உடனே நாக்கில் எச்சில் ஊறும் வண்னம் பலரது ஃபேவரைட் லிஸ்ட்டில் முதலிடம் பிரியாணிக்குதான். பிரியாணி பிடிக்காதவர்களே யாரும் இருக்கமாட்டார்கள் என கூறும் அளவிற்கு அதற்கு ரசிகர்கள் அதிகம்.

பிரியாணி சாப்பிட்டால் குழந்தை பிறக்காது.. அதிர்ச்சி தகவல் - நிலவரம் என்ன! | Facts About Biriyani

இந்நிலையில், சமீபமாக பிரியாணி சாப்பிட்டால் குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்படும் என செய்தி ஒன்று பரவி வருகிறது. அதன் அடிப்படையில், இதுகுறித்து விவாதங்கள் பெருமளவில் எழுந்தது. தொடர்ந்து இதன் உண்மையை அறிய மருத்துவர் ஒருவர் தகவல் அளித்துள்ளார்.

குழந்தை பிறக்காது?

அவர் கூறியதாவது, பிரியாணி சாப்பிட்டால் செரிமானத்தில் பிரச்சணை ஏற்படும். பிரியாணிகளில் சேர்க்கப்படும் பொருள்களால் இந்தப் பிரச்சணைகள் வரலாம். வாரத்திற்கு ஒரு முறை சாப்பிடும்போது உடலில் பாதிப்புகள் வராது.

சிலர் தினமும் மூன்று வேளையும் அதை மட்டுமே சாப்பிடும்போது இரத்தக் குழாய்களில் அடைப்பு, கொலஸ்ட்ரால் அளவு அதிகமாவது போன்ற விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால், பிரியாணி சாப்பிட்டால் சாப்பிட்டால் குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்படும் என்பது முற்றிலும் வதந்தி என தெரிவித்துள்ளார்.