Fact Check; ஜான்வி கபூருடன் ஹர்திக் பாண்டியா டேட்டிங்கா? உண்மை என்ன?
ஜான்வி கபூரும் ஹர்திக் பாண்டியாவும் டேட்டிங் சென்றது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஹர்திக் பாண்டியா
இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய ஆல் ரவுண்டராக இருப்பவர் ஹர்திக் பாண்டியா. இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு பிக்பாஸ் போட்டியாளரும் நடன கலைஞருமான நடாசா ஸ்டான்கோவிக் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், கடந்த 2024 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்து வாழ உள்ளதாக அறிவித்தனர்.
ஜான்வி கபூருடன் டேட்டிங்கா?
இந்நிலையில் ஹர்திக் பாண்டியா, பிரபல பாலிவுட் நடிகையான ஜான்வி கபூரும் மாலத்தீவில் உள்ள கடற்கரையில் இருவரும் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தது. இது உண்மையா என கண்டறிய அவரக்ளின் சமூகவலைத்தள கணக்குகளில் பார்த்த போது சமீபத்தில் அவர்கள் மாலத்தீவிற்கு சென்ற புகைப்படங்கள் எதுவும் பதிவிடவில்லை.
மேலும், அந்த படங்களை ஆய்வு செய்ததில், AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்ட Deep Fake வகையிலான போலியான புகைப்படங்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் இது போல் பிரபலங்களை வைத்து போலியான புகைப்படங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு போலியான புகைப்படங்களை உருவாக்கி வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதுபோன்ற போலியான பதிவுகள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.