நெட்வொர்க் இல்லை..ஆனால் அவசரமாக கால் செய்யனுமா? இப்படி செய்து பாருங்க!
செல்போனில் நெட்வொர்க் இல்லாவிட்டாலும் கால் செய்வது குறித்து இந்த பதிவில் காணலாம்.
நெட்வொர்க் இல்லை..
இன்றைய காலகட்டத்தில் செல்போன் என்பது மிகவும் முக்கியமான விஷயமாக மாறிவிட்டது. எங்கு இருந்தாலும் நம் தகவல்களை போன் மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள போன் உதவியாக உள்ளது. ஒருவேளை நீங்கள் இருக்கும் இடத்தில் நெட்ஒர்க் இல்லை என்றால் மட்டுமே சற்று சிரமமாக இருக்கும்.
ஆனால் இது போன்ற சமயங்களிலும் போன் கால் மற்றும் வீடியோ கால்களை எளிதாக செய்யலாம்.அதாவது, உங்கள் மடிக்கணினி அதாவது லேப்டாப் மூலம் அழைப்புகளை மேற்கொள்ளலாம். நெட்வொர்க் பிரச்சனை இருக்கும்போது லேப்டாப்பைத் திறந்து வாட்ஸ்அப்பைத் திறக்கவும்.
அதில் முதலில் அழைப்பு செட்டிங்ஸ் என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். பிறகு அங்கு தோன்றும் ஃபோன் கால் ஐகானின் அருகில் கிளிக் செய்தால், அது தொடர்பு பெயரைக் கேட்கும், எண்ணைக் கேட்காது. நீங்கள் அழைக்க விரும்பும் நபரின் எண்ணுக்கு அழைப்பு உடனடியாகச் செல்லும்.
கால் செய்யனுமா?
அவர்கள் வேறு நாட்டில் இருந்தாலும் வாட்ஸ்அப் டெஸ்க்டாப்பைப் பயன்படுத்தி அழைக்கலாம். ஆனால் இதற்கு உங்கள் லேப்டாப்பில் கண்டிப்பாக இணைய இணைப்பு தேவை என்பதை மறந்துவிடாதீர்கள். வாட்ஸ்அப் அழைப்பிற்காக முதலில் வாட்ஸ்அப் டெஸ்க்டாப் செயலியை லேப்டாப்பில் ஓபன் செய்ய வேண்டும்.
பின் வீடியோ காலிங் ஆப்ஷனை கிளிக் செய்யவும். Voice, Video Call என்பதில் கிளிக் செய்த பிறகு, (Audio Output Device, Microphone) ஆப்ஷனை ஏற்க வேண்டும். உங்கள் தொடர்புடன் குரல் அழைப்பில் பேசும்போது வீடியோ அழைப்பிற்கு மாறலாம். வீடியோ அழைப்பு ஐகானைக் கிளிக் செய்யவும். மற்றவர் சுவிட்சை ஏற்றுக்கொண்டால், நீங்கள் குரல் மற்றும் வீடியோவுக்கு மாறலாம்.