பேஸ்புக் மூலம் பழக்கம் - பரிசு பொருள் அனுப்புவதாக கூறி பெண்ணிடம் 38 லட்சம் மோசடி

Facebook Thoothukudi Money
By Karthikraja Jul 01, 2024 04:05 AM GMT
Report

பேஸ்புக் மூலம் பழகிய நபரிடம் பெண் ஒருவர் லட்சக்கணக்கான பணத்தை இழந்துள்ளார்.

பேஸ்புக்

தொழில்நுட்பங்கள் வளர வளர அதன் மூலம் குற்றச்செயல்களும் அதிகரித்து வருகிறது. பல்வேறு வழிகளில் இணையதளம், சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி பண மோசடி செய்கின்றனர். இந்நிலையில் இது போல பேஸ்புக் மூலம் பழகியவரிடம், 38 லட்சத்தை பெண் ஒருவர் இழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

facebook friendship

தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின் புதூர் பகுதியைச் சேர்ந்த அந்த பெண் பேஸ்புக்கில் Nicholas Andrewis Morris என்ற பெயருடைய அடையாளம் தெரியாத நபருடன் அறிமுகமாகி இருவரும் சேட்டிங் செய்து நாளடைவில் இருவரும் நண்பர்கள் போல பழக தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், அந்த நபர் பெண்ணுக்கு கிப்ட் பார்சல் அனுப்புவதாக கூறியுள்ளார். 

டேட்டிங் ஆப் மூலம் பழக்கம் - நேரில் சந்திக்கும் போது நடந்த அதிர்ச்சி சம்பவம்

டேட்டிங் ஆப் மூலம் பழக்கம் - நேரில் சந்திக்கும் போது நடந்த அதிர்ச்சி சம்பவம்

சுங்கத்துறை

அதனை தொடர்ந்து, சில நாட்கள் கழித்து, அப்பெண்ணுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. சுங்கத்துறை அலுவலகத்திலிருந்து பேசுவதாக பெண் ஒருவர் கூறியுள்ளார். அதில், '' உங்களுக்கு 70,000- Pounds பணம், நகை மற்றும் ஐ போன் ஆகியவை பார்சலில் வந்துள்ளதாகவும், அந்தப் பார்சலை பெறுவதற்கு பிராசசிங் கட்டணம், டெலிவரி கட்டணம், ஜிஎஸ்டி, கஸ்டம்ஸ் உள்ளிடவைகளுக்கு பணம் கட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளார். 

இதனை நம்பிய அந்த பெண் பல்வேறு தவணைகளில் 38,19,300 ரூபாய் ஆன்லைனில் அனுப்பி வைத்துள்ளார். பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த அந்த பெண் இது குறித்து சைபர் குற்ற தடுப்பு பிரிவில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் ஜோஸ்லின் அருள் செல்வி தலைமையிலான சைபர் குற்றப்பிரிவு தடுப்பு போலீசார் மோசடியில் ஈடுபட்ட நபரை குறித்து விசாரித்து வந்தனர். 

facebook scammer

விசாரணையில் வேலூர் மாவட்டம் அரக்கோணம் அக்கச்சிகுப்பம் பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் மகன் முத்து (32) என்பவர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து, சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் வைத்து முத்துவை கைது செய்து தூத்துக்குடிக்கு அழைத்து வந்து, தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பேரூரணி சிறையிலடைத்தனர். மேலும், இதுகுறித்து சைபர் குற்ற தடுப்பு பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.