Tuesday, May 6, 2025

முகமது ஷமிக்கு பாலியல் தொழிலாளர்களுடன் தொடர்பு - மனைவி பகீர் தகவல்

Cricket Mohammed Shami
By Sumathi 2 years ago
Report

முகமது ஷமி பாலியல் தொழிலாளர்களுடன் தொடர்பிலிருந்தார் என அவரது மனைவி குற்றம் சாட்டியுள்ளார்.

முகமது ஷமி

இந்திய அணியின் முன்னணி வீரராக திகழும் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. ஹாசின் ஜஹான் என்ற பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார். இருவருக்கும் இடையே நீண்டகாலமாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இதனால் தொடர்ந்து 4 வருடங்களாக மனைவி பல புகார்களை தெரிவித்து வருகிறார்.

முகமது ஷமிக்கு பாலியல் தொழிலாளர்களுடன் தொடர்பு - மனைவி பகீர் தகவல் | Extramarital Affair Mohammed Shamis Wife Complaint

அதில், வரதட்சனை கேட்டு துன்புறுத்துவதாகவும், குடும்ப தகராறில் தன்னை தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கு ஷமி மறுப்பு தெரிவித்துள்ளார். இவர்களது விவாகரத்து வழக்கு 2018ல் தொடரப்பட்டு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஹாசின் உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

பாலியல் தொடர்பு

அதில், ஷமி மீதான கிரிமினல் வழக்கு நடவடிக்கை எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பல பாலியல் தொழிலாளர்களிடம் கள்ள உறவு வைத்துக்கொண்டிருந்தார். இதற்காக தனியாக ஒரு மொபைல் போன் வைத்திருந்தார்.

முகமது ஷமிக்கு பாலியல் தொழிலாளர்களுடன் தொடர்பு - மனைவி பகீர் தகவல் | Extramarital Affair Mohammed Shamis Wife Complaint

கிரிக்கெட் விளையாட சக அணி வீரர்களுடன் பயணம் மேற்கொள்ளும் போது கூட இந்த உறவுகளை தொடர்ந்து மேற்கொண்டார் என தெரிவித்துள்ளார். முன்னதாக மனைவிக்கு மாதாந்திர ஜீவனாம்சமாக ரூ.1.30 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனால் இந்த ஜீவனாம்சம் தொகை தனக்கு திருப்திகரமாக இல்லை என ஹாசின் கூறியுள்ளார்.