முகமது ஷமி விவாகரத்து வழக்கு - மாதம்தோறும் ரூ.1.30 லட்சம் கொடுக்க வேண்டும் - கோர்ட் அதிரடி உத்தரவு!

Mohammed Shami
By Nandhini Jan 25, 2023 07:24 AM GMT
Report

மனைவி மற்றும் மகளின் பராமரிப்பு செலவுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1.30 லட்சம் கொடுக்க வேண்டும் என்று முகமது ஷமிக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

முகமது ஷமி விவாகரத்து வழக்கு

இந்திய கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளராக வலம் வருபவர் முகமது ஷமி. இவர் தனது அதிரடி ஆட்டத்தால் கிரிக்கெட்டில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். முகமது ஷமி மீது பல குற்றங்களை அவரது மனைவி ஹசின் ஜஹான் கூறி வருகிறார்.

வரதட்சனை கேட்டு துன்புறுத்துவதாகவும், குடும்ப தகராறில் தன்னை தாக்கியதாகவும் போலீசில் முகமது ஷமி மீது புகார் கொடுத்தார். ஆனால், இந்த புகார்களை ஷமி மறுத்து பேசினார். முகமது ஷமி மற்றும் ஹாசின் ஜஹான் விவாகரத்து வழக்கு கொல்கத்தா குடும்ப நல நீதிமன்றத்தில் கடந்த 2018ம் ஆண்டு தொடரப்பட்டது.

mohammed-shami-cricketer-divorce-case

கோர்ட் அதிரடி உத்தரவு

இவ்வழக்கில் மனைவி ஹசின் ஜஹான் தன்னுடைய சொந்த செலவுக்கு ரூ.7 லட்சம் மற்றும் மகளின் பராமரிப்பிற்காக ரூ.3 லட்சம் என்று மொத்தமாக ரூ.10 லட்சம் வேண்டும் என்று கேட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது முகமது ஷமி தனது மனைவி ஹசின் ஜஹான் மற்றும் மகளின் பரமாரிப்பு செலவுக்காக ஓவ்வொரு மாதமும் ரூ.1.30 லட்சம் வழங்க வேண்டும் என்று மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.