ஒப்பந்தம் போட்டு தகாத உறவில் இருந்த கணவன்-மனைவி - அதிர்ச்சி சம்பவம்!

Tamil nadu Attempted Murder Crime
By Sumathi Dec 26, 2022 05:58 AM GMT
Report

தகாத உறவுக்கு தடையாக இருந்ததாக கணவனை, மனைவி கூலிப்படை வைத்து கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

தகாத உறவு

கோழிக்கால் நத்தம் பகுதியை சேர்ந்தவர் தேவா(34). இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், மர்ம நபர்களால் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணையில் ஈடுபட்டனர்.

ஒப்பந்தம் போட்டு தகாத உறவில் இருந்த கணவன்-மனைவி - அதிர்ச்சி சம்பவம்! | Extra Marital Affair Wife Murdering Husband

அதில், தேவராஜுக்கு சரண்யா (30) என்ற மனைவியும்,1 மகனும், 1 மகளும் உள்ளனர். தொழில் ரீதியாக கணவரோடு பழகி வந்த விமல் குமார் என்பவர் அடிக்கடி வீட்டிற்கு வந்துச் சென்றுள்ளார். அதில் சரண்யாவுக்கும் விமல் குமாருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சந்தேகம் எழுந்த பெற்றோர் இதனை கண்டித்து சண்டையிட்டுள்ளனர்.

கொடூர கொலை

எனவே, தேவா மனைவியுடன் வேறு பகுதிக்கு தனிக்குடித்தனம் சென்றுள்ளர். அங்கு தேவாவுக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த சரண்யா அவரை கண்டித்துள்ளார், அதற்கு தேவா உன்னை நான் கண்டுகொள்ளவில்லை. என்னை நீ கண்டுகொள்ள வேண்டாம் என ஒப்பந்தம் செய்துள்ளனர்.

ஆனால், விமல் குமார் இதனை காரணமாக வைத்து வீட்டிற்கு அடிக்கடி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தேவா மனைவியை கண்டித்துள்ளார். அதனைத் தொடர்ந்து விமல் குமார் சரண்யா இருவரும் கணவரை கொலை செய்ய முடிவு செய்தனர். தேவா பெயரில் 10 லட்சம் ரூபாய்க்கு இன்சூரன்ஸ் செய்துள்ளனர்.

அதனை வைத்து கூலிப்படையை ஏவி தேவாவை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று கழுத்தை அறுத்தும் கத்தியால் குத்தியும் கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.