100 ஆண்டுகளுக்கு முன் அழிந்த உயிரினம்; மீண்டும் வந்த அதிசயம் - வைரலாகும் வீடியோ
100 ஆண்டுகளுக்கு முன் அழிந்த உயிரினம் மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது.
அழியும் உயிரினங்கள்
உலகம் முழுவதும் பரிணாம வளர்ச்சி மற்றும் மனிதர்கள் வேட்டையாடியதால் பல்வேறு உயிரினங்கள் அழிவை நோக்கி சென்றன. IUCN வெளியிடும் அழிந்துபோகும் அபாயத்தில் சிகப்பு பட்டியலில் 46,300க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன.
அந்த பட்டியலில் டாபீர் என்னும் உயிரினமும் உள்ளது. டாபீர் என்பது காண்டாமிருகம் இனத்தின் வகையைச் சேர்ந்த உயிரினமாகும். இந்த உயிரினம் கடைசியாக 1914 ஆம் ஆண்டு கேமிராவில் பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகு இந்த உயிரினத்தை எங்கும் பார்க்க முடியாததால், இந்த உயிரினம் அழிந்துவிட்டதாகத் கருதப்பட்டது.
மீண்டும் வந்த டாபீர்
இந்நிலையில், பிரேசிலில் உள்ள தேசிய பூங்கா ஒன்றில், ஒரு தாய் மற்றும் 2 குட்டி என 3 டாபீர் உயிரினங்கள் கேமராவில் படம்பிடிக்கப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. டாபிர்களை கண்காணித்து அவற்றை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என விலங்கு நல ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தாவரங்களை உட்கொள்வதன் மூலமும், கழிவுகளின் மூலம் விதைகளைப் பரப்புவதன் மூலமும், காடுகளின் வளர்ச்சிக்கு டாபீர் உதவுகிறது. 150 முதல் 250 கிலோ வரை எடை கொண்ட டாபீர்கள், 6 அடி நீளம் கொண்டவை. டாபீரின் ஆயுட்காலம் 25 முதல் 30 ஆண்டுகள் ஆகும். இவை பார்ப்பதற்கு அமைதியாக இருந்தாலும் திடீரென மனிதர்கள் மீது தாக்குதல் நடத்தும் எனவும் கூறப்படுகிறது.
டாபீர்கள் குட்டியாக இருக்கும் போது உடல் முழுவதும்வெள்ளைநிற கோடு மற்றும் புள்ளிகளுடன் பார்ப்பதற்கு மான்களைப் போன்று காணப்படும். ஆனால் வளர வளர அவை மறைந்துவிடும். டாபீர்கள் நீரின் அடிப்பகுதிக்கு செல்லும் போது, அங்குள்ள தாவரங்களையும் உணவாக எடுத்துக் கொள்ளும். மேற்பரப்பில் இருக்கும்போது பழங்கள், செடிகள், இலைகள் மற்றும் தாவரங்களை உணவாக எடுத்துக்கொள்ளும்.