ராணி எலிசபெத்தின் இறுதி சடங்குக்காக மட்டும் இவ்வளவு செலவாம்... எவ்வளவு தெரியுமா?
பிரிட்டன் ராணி இறுதிச் சடங்குக்காக மட்டும் அதிக அளவில் செலவழிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராணி எலிசபெத்
1952ல் அரியணைக்கு வந்த ராணி எலிசபெத், தனது பதவிகால வரலாற்றில் 15 பிரதமர்களை பதவியேற்று வைத்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரிட்டன் பிரதமராக இருந்த போரீஸ் ஜான்சனுக்கு நடைபெற்ற பிரிவு உபசார விழாவில் கலந்து கொண்ட அவரை,

வாழ்த்தியதோடு புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள லிஸ் டிரஸும் வாழ்த்து பெற்றார். எப்போதும் பிரதமராய் பக்கிங்ஹாம் அரண்மனையில் சந்திக்கும் ரானி, இந்த முறை பால்மாரல் அரண்மனையில் சந்தித்தார்.
இறுதி சடங்கு
திடீரென உடல் நலம் குன்றிய எலிசபெத்தினை தீவிர கண்கானிப்பில் வைத்திருந்திருந்த அவர்கள், தொடர்ந்து சிகிச்சையும் அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 96 வயது வரை வாழ்ந்த எலிசபெத் தனது வாழ்நாளில் 70 ஆண்டுகாலம் ராணி பட்டம் பெற்று ஆட்சி நடத்தியுள்ளார்.

ராணி எலிசபெத்தின் இறுதி சடங்குக்காக மட்டும் சுமார் 6 பில்லியன் பவுண்டுகள் செலவாகும் என எதிர்பார்கப்படுகிறது. அதவாது இந்திய ரூபாய் மதிப்பில் 55 ஆயிரம் கோடி ருபாய் என்று கணக்கிடப்படுள்ளது.
செலவு
மேலும், தற்பொழுது உள்ள பிரிட்டன் நாட்டு பணத்தாள்களில் ராணி எலிசபெத்தின் படங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த பணத்தாள்கள் படிப்படியாக மாற்றப்பட்டு அதில் புதிதாக பதவி ஏற்றுள்ள பிரிட்டன் பிரதமர் சார்லஸ் படம் இடம் பெற உள்ளது.
இதற்காக 10 பில்லியன் பவுண்டுகளுக்கு மேல் செலவாகும் என எதிர்பார்கப்படுகிறது. இது இந்திய மதிப்பில் சுமார் 1 லட்சம் கோடி என்கின்றனர்.