70 ஆண்டுகளாக ராணியாக இருந்த எலிசபெத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
பிரிட்டனில் நீண்டகாலமாக ஆட்சி செய்து வந்த ராணி இரண்டாம் எலிசபெத், 70 ஆண்டுகள் ஆளுகைக்குப் பிறகு 96 வயதில் காலமானார். 1952ல் அரியணைக்கு வந்த ராணி எலிசபெத், தனது பதவிகால வரலாற்றில் 15 பிரதமர்களை பதவியேற்று வைத்துள்ளார்.
500 மில்லியனுக்கு மேல் சொத்து மதிப்பு
பிரிட்டனில் ஆறாம் ஜார்ஜ் மன்னர் 1952ம் ஆண்டு மரணம் அடைந்தபோது, நாட்டின் ராணியாக பதவியேற்றவர் , திடீரென உடல் நலம் குன்றிய எலிசபெத்தினை தீவிர கண்கானிப்பில் வைத்திருந்திருந்த அவர்கள், தொடர்ந்து சிகிச்சையும் அளித்து வந்தனர்.
இந்த நிலையில் தான் பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அரண்மனை வெளியிட்டுள்ளது. அவரது உடல் நாளை லண்டனுக்கு கொண்டு வரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

70 ஆண்டுகள் ஆளுகை செய்த எலிசபெத்தின் சொத்து மதிப்பு 500 மில்லியன் டாலருக்கும் மேல். என கூறப்படுகிறது. கடந்த 2021 - 2022 காலகட்டத்தில் ராணி எலிசபெத்துக்கு 86 மில்லியன் பவுண்டுகள் கிராண்ட் தொகையாக கொடுக்கப்பட்டது.
இது அலுவல் ரீதியான பயணம், சொத்து பராமரிப்பு, செயல்பாடு, பராமரிப்பு செலவினங்கள் என பலவும் அடங்கும். எனினும் இது மட்டுமே ராணிக்கு கிடைத்த வருமானம் அல்ல. மொனார்கி பி எல் சி என்று அழைக்கப்படும் நிறுவனம் ராணி குடும்பத்தினால் நடத்தப்படும் ஒரு வணிக சாம்ராஜ்ஜியமாகும்.
சொத்துகளை விற்கமுடியாது
போர்ப்ஸ் அறிக்கையின் படி, 2021ம் ஆண்டு நிலவரப்படி கிட்டதட்ட 28 பில்லியன் டாலர் ரியல் எஸ்டேட் சொத்துகளை வைத்திருக்கிறது. இதனை விற்பனை செய்ய முடியாது.
இதில் கிரவுன் எஸ்ட்டேட் - 19.5 பில்லியன் டாலர் பக்கிம்ஹாங் அரண்மனை - 4.9 பில்லியன் டாலர் தி டச்சி ஆஃப் கார்ன்வால் - 1.3 பில்லியன் டாலர் தி டச்சி ஆஃப் லாங்காஸ்டர் - 748 மில்லியன் டாலர் கென்சிங்டன் அரண்மனி - 630 மில்லியன் டலார் ஸ்ஜ்காட்லாந்தின் கிரவுன் எஸ்டேட் - 592 மில்லியன் டாலர் இதன் மூலம் வணிக ரீதியாக அரச குடும்பம் லாபம் ஈட்ட முடியாது என்றாலும், பொருளாதாரத்தினை உயர்த்துவதே இதன் நோக்கமாக உள்ளது.

ராணி எலிசபெத்துக்கு தனிப்பட்ட முறையில் விலையுயர்ந்த ஓவிய படைப்புகள், நகைகள், ரியல் எஸ்டேட் சொத்துகள், பல முதலீடுகள் என பலவும் உள்ளன. இதில் பெரும்பாலான சொத்துகள் இளவரசர் சார்லஸ் அரியணை ஏறும்போது அவருக்கு கொடுக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த சொத்துகளுக்கு இங்கிலாந்து சட்டத்தின் படி வரி விலக்கும் அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.