மனைவியை வீட்டு வேலை செய்ய சொன்னது கொடுமையா? நீதிமன்றம் பரபரப்பு பதில்
மனைவியை வீட்டு வேலை செய்ய சொல்வது கொடுமையல்ல என டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
விவாகரத்து
நேர்மையான - அன்பான துணை இல்லை அதனை சகித்து கொண்டு வாழும் நிலை யாருக்கும் கூடாது. அதனை பலரும் ஆதரிக்கிறோம் என்றாலும், தற்போது விவகாரத்து கேட்பவர்களின் எண்ணிக்கை இந்திய அளவில் அதிகரித்து வருவதாக தகவல் கிடைக்கப்பெறுகின்றன.
இதற்கு முக்கிய காரணம், சரியான புரிதலும், வாழ்க்கையில் பலரிடமும் விட்டுக்கொடுத்து போகும் தன்மை இல்லாதது தான். சொற்ப விஷயங்களுக்கெல்லாம் விவாகரத்து கேட்பது சகஜமாகி வரும் நிலையில், அப்படி ஒரு வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் வந்துள்ளது. மனைவி தன்னை கொடுமை செய்ததாக கூறி, அதன் காரணமாக விவாகரத்து வேண்டும் குடும்பநல நீதிமன்றத்தில் கணவர் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை குடும்ப நில நீதிமன்ற நிராகரித்த நிலையில், உத்தரவை எதிர்த்து கணவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.
வீட்டு வேலை
மனு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா மற்றும் நீதிபதி சுரேஷ் குமார் கைட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, மனைவி வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும் என கணவர் எதிர்பார்ப்பதைக் கொடுமையாகக் கருத முடியாது என கூறி, மனைவியை வீட்டு வேலை செய்ய சொல்வது வாழ்க்கையின் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வதே என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் கணவனை குடும்பத்தைவிட்டுப் பிரிந்து வாழச் சொல்வது மனைவி செய்யும் கொடுமையாக கருதப்படும் என்ற நீதிபதிகள் கணவர் நிதிப் பொறுப்புகளையும், மனைவி வீட்டுப் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார் என்று கூறி, எனவே, மனைவி வீட்டு வேலை செய்ய வேண்டும் என்று கணவர் எதிர்பார்ப்பது தவறில்லை என தெரிவித்து, இந்து திருமணச் சட்டம், 1955 இன் பிரிவு 13(1)இன் கீழ் கணவருக்கு டெல்லி நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.