இன்று தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட் - எதிர்பார்ப்புகள் என்னென்ன?
3ஆவது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான கூட்டணி பாஜக ஆட்சி மத்தியில் அமைந்துள்ளது. ஆட்சி அமைந்த பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் முதல் பட்ஜெட் இன்று நிகழவிருக்கிறது.
மத்திய பட்ஜெட் அதுவும் தேர்தலுக்கு பிறகு என்பதால் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்த பட்ஜெட் மீதாக இருக்கும் சில எதிர்பார்ப்புகளை குறித்து தற்போது காணலாம்.
கோழிப்பண்ணை, பால் பண்ணை, தேனீ வளர்ப்பு போன்ற சிறு, குறு தொழில்களுக்கு வழங்கும் முத்ரா யோஜனா திட்டத்தின் 20 லட்சம் ரூபாயை இரட்டிப்பாக்கும் கோரிக்கை உள்ளது.
உள்நாட்டு உற்பத்தியை பெருக்க, தொழில் முனைவோர்களுக்கு வாய்ப்புகளை அதிகரிப்பதுடன் சேர்த்து மானியம் இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
வேலைவாய்ப்புகளை அதிகம் உருவாக்கும் திட்டங்கள் இடம்பெறுமா? நடுத்தர மக்களின் முக்கிய பிரச்னையான வருமான வரி முறைகளில் மாற்றம் இருக்குமா போன்ற எதிர்பார்ப்புகளும் அதிகளவில் உள்ளது.