தேர்தல் கருத்து கணிப்பு; மாறாக வந்த முடிவு, நிறுவனத்துக்கு இழப்பு - தலைவர் தகவல்!

India Lok Sabha Election 2024
By Sumathi Jun 24, 2024 04:45 AM GMT
Report

தேர்தல் கருத்து கணிப்பால் நிறுவனத்துக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து கணிப்பு

 மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு நிறைவடைந்ததும் பல்வேறு முன்னணி ஊடகங்கள் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டன. ஆனால், அதற்கு மாறாகவே தேர்தல் முடிவுகள் வந்தன.

தேர்தல் கருத்து கணிப்பு; மாறாக வந்த முடிவு, நிறுவனத்துக்கு இழப்பு - தலைவர் தகவல்! | Exit Polls Loss Making Business Pradeep Gupta

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள முன்னணி கருத்துக் கணிப்பு நிறுவனமான ஆக்சிஸ் மை இண்டியாவின் தலைவர் பிரதீப் குப்தா, தேர்தல் கருத்துக் கணிப்புகளை நடத்துவதால் எங்களுக்கு எவ்வித லாபமும் இல்லை.

கருத்துக் கணிப்புகளை நடத்துவதற்கான செலவுகளை ஊடகங்கள் முழுமையாக வழங்குவது கிடையாது. கருத்துக் கணிப்பை நடத்தும்ஊழியருக்கு ஒரு நாளைக்கு தலாரூ.500 மற்றும் படிகளை வழங்குகிறோம்.

1400 கோடிக்கு சொத்து - 10 கோடியில் லண்டனில் வீடு - அதிரவைத்த பாஜக வேட்பாளர்

1400 கோடிக்கு சொத்து - 10 கோடியில் லண்டனில் வீடு - அதிரவைத்த பாஜக வேட்பாளர்

நிறுவனத்துக்கு இழப்பு

நாடு முழுவதும் கருத்துக் கணிப்புகளை நடத்துவதற்காக பெருந்தொகையை செலவிடுகிறோம். இதனால் எங்களுக்கு பொருளாதார இழப்பே ஏற்படுகிறது. எனினும் தேர்தல் கருத்துக் கணிப்புகள் மூலம் எங்களுக்கு விளம்பரம் கிடைக்கும். அதன்மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள் கருத்துக் கணிப்புகளுக்காக எங்களை அணுகுவார்கள்.

தேர்தல் கருத்து கணிப்பு; மாறாக வந்த முடிவு, நிறுவனத்துக்கு இழப்பு - தலைவர் தகவல்! | Exit Polls Loss Making Business Pradeep Gupta

மக்களவைத் தேர்தலில் 5.82லட்சம் பேரின் கருத்துகளைநாங்கள் கேட்டறிந்தோம். இதன்அடிப்படையிலேயே கருத்துக் கணிப்புகளை வெளியிட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.