ஆண்களை உற்சாகப்படுத்த பெண்களை மேக்அப் போடச் சொன்ன அதிகாரி - அதிர்ச்சியில் ஊழியர்கள்!

China
By Sumathi Dec 30, 2023 06:08 AM GMT
Report

அதிகாரி ஒருவர் பெண் ஊழியர்கள் நன்றாக மேக்அப் போட வலியுறுத்தியுள்ளது.

அதிகாரி கருத்து

சீனாவை சேர்ந்த ஒரு பிரபல நிறுவனத்தின் செயல் அதிகாரியாக இருப்பவர் லாவோ. இந்த நிறுவனத்தின் வீ சாட் குரூப்-ல் அவர் பேசியது வைரலாகி வருகிறது. இந்த குரூப்பில் 5 பெண் ஊழியர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

women-employess-to-apply-makeup-to-motivate

அதில், பெண் ஊழியர்கள் நன்றாக மேக்அப்பையும் போட்டுக் கொள்ள வேண்டும். பெண் ஊழியர்கள் நன்றாக மேக்அப் போட்டுக்கொண்டால் அது ஆண் ஊழியர்கள் உற்சாகத்துடன் வேலை செய்வதற்கு உதவியாக இருக்கும். ஆண் ஊழியர்கள் கிரவுட்பண்டிங் முறையில் பணம் திரட்டி உங்களை மாலையில் டீ-க்கு அழைத்துச் செல்வார்கள்.

மேக்கப் போட்டதால் வந்த வினை - மணமகளுக்கு முகம் வீங்கியதால் திருமணத்தை நிறுத்திய மணமகன்

மேக்கப் போட்டதால் வந்த வினை - மணமகளுக்கு முகம் வீங்கியதால் திருமணத்தை நிறுத்திய மணமகன்

கொந்தளித்த ஊழியர்கள்

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் யாரும் பதில் சொல்லவில்லை. தொடர்ந்து, ஊழியர்களை பேசவைக்க போனஸ் வேண்டும் என்றால் ரிப்ளை செய்யுங்கள் என மறைமுகமாக மிரட்டியுள்ளார். அப்போதும் பதில் வராததால், இந்த மெசேஜ் எப்போது வருகிறதோ அப்போது, பதில் போடுங்க.. பதில் அளிக்காதவர்களின் போனஸ் குறைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

china

தொடர்ந்து, அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவரால் சோசியல் மீடியாவில் இந்தப் பதிவு பகிரப்பட்டுள்ளது. இது பெரும் கண்டனங்களை பெற்ற நிலையில், தான் ஆண் ஊழியர்களை உற்சாகப்படுத்துவதற்காக எந்த பெண் ஊழியரையும் மேக்அப் போட வலியுறுத்தவில்லை.

அது வெறும் ஒரு ஜோக். நாங்கள் அதை கூட்ட உரையாடலில் இருந்து நீக்கிவிட்டோம். அது ஒரு விஷயமே இல்லை என்று ஊழியர்களுக்கு அனைவருக்கும் தெரியும் என்று குறிப்பிடுள்ளார்.