முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மனைவிக்கு 14 ஆண்டுகள் சிறை - என்ன காரணம்?

Pakistan Imran Khan Crime
By Sumathi Jan 31, 2024 07:25 AM GMT
Report

இம்ரான் கான் மனைவிக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இம்ரான் கான்

பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவர் இம்ரான் கான். 2018 முதல் 2022 வரை பிரதமராக இருந்தார். அப்போது, வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் பிரமுகர்களிடமிருந்து பெற்ற பரிசுகளை

imran khan wife bushra bibi

அரசிடம் ஒப்படைக்காமல் விற்று சொத்து சேர்த்து ஊழலில் ஈடுபட்டதாக இவர் மற்றும் மனைவி மீது குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், அரசின் ரகசியங்களை கசியவிட்டதாகவும், பிரதமர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து வன்முறையை தூண்டியதாகவும் வழக்குப்பதிவு செய்து ராவல்பிண்டியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

விஷம் வைத்து கொல்லப் பாக்குறாங்க.. சிறையில் மரண பயத்தில் பதறும் இம்ரான் கான்!

விஷம் வைத்து கொல்லப் பாக்குறாங்க.. சிறையில் மரண பயத்தில் பதறும் இம்ரான் கான்!

14 ஆண்டுகள் சிறை

தொடர்ந்து, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், அவர் மனைவி புஷ்ரா பீபி மீதும் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மனைவிக்கு 14 ஆண்டுகள் சிறை - என்ன காரணம்? | Ex Pm Imran Khan Wife Bushra Bibi 14 Year Jail

அதில், அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு இருவருக்கும் தலா 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. அவரது மனைவி, 10 ஆண்டுகளுக்கு அரசு பதவிகள் வகிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இருவருக்கும் 787 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.