பிரபல one direction பாப் பாடகர்.. மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு - கொலையா? தற்கொலையா?

Death England World
By Swetha Oct 17, 2024 05:52 AM GMT
Report

பிரபல பாப் பாடகர் லியாம் பெய்ன் உயிரிழந்தது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பாப் பாடகர்.. 

ஒன் டைரக்‌ஷன் என்ற பாப் இசைக் குழுவின் மூலம் இங்கிலாந்தை சேர்ந்த லியாம் பெய்ன் மிகவும் பிரபலமானார். கடந்த 2008 முதல் தொடங்கி அவர் இசைத்துறையில் இயங்கி வருகிறார். பிரிட்டிஷ் தொலைக்காட்சி ஊடகம் ஒன்றில் ஒளிபரப்பான ‘தி எக்ஸ் ஃபேக்டர்’ மூலம் வாய்ப்பு பெற்றவர்.

பிரபல one direction பாப் பாடகர்.. மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு - கொலையா? தற்கொலையா? | Ex One Direction Crew Singer Liam Payne Dies At 31

பின்னர் தனியாக பாடல்களை வெளியிட்டார். ஆர்&பி ஜானரிலும் அவர் தேர்ந்தவர். அவர் கடந்த மாதம் தனது தோழியுடன் அர்ஜெண்டினாவில் அவர் விடுமுறையை செலவிட்டுள்ளார். இந்த நிலையில், கடந்த 14-ம் தேதி அவரது தோழி அர்ஜெண்டினாவில் இருந்து சென்றுள்ளார்.

என்னால் வாயினை அசைக்க முடியவில்லை : பிரபல பாடகருக்கு நேர்ந்த பரிதாபம், சோகத்தில்  ரசிகர்கள்

என்னால் வாயினை அசைக்க முடியவில்லை : பிரபல பாடகருக்கு நேர்ந்த பரிதாபம், சோகத்தில் ரசிகர்கள்


உயிரிழப்பு 

பின்னர் வேறொரு விடுதியில் லியாம் பெய்ன் அறை எடுத்து தங்கியுள்ளார். அங்கிருந்து 1டி குழு நண்பரின் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொள்ள இருந்தார். இந்த சூழலில் நேற்று மாலை விடுதியின் லாபியில் ஆண் ஒருவர் ஆக்ரோஷத்துடன் நடந்து கொள்வதாக அவசர உதவி எண்ணுக்கு புகார் சென்றுள்ளது.

பிரபல one direction பாப் பாடகர்.. மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு - கொலையா? தற்கொலையா? | Ex One Direction Crew Singer Liam Payne Dies At 31

அந்த நபர் லியாம் தான் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் சொல்லியதாக தகவல் கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து, விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்த தனது அறையின் பால்கனியில் இருந்து கீழே விழுந்து அவர் உயிரிழந்துள்ளார் என்று தெரியவந்தது.

இது தற்கொலையா அல்லது போதையில் தவறி விழுந்தாரா என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அவருக்கு போதை பழக்கம் இருப்பதாக கடந்த ஆண்டு தெரிவித்தார். அதை தவிர்க்க பயிற்சி மேற்கொண்டது குறித்தும் அவர் சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார்.