என்னால் வாயினை அசைக்க முடியவில்லை : பிரபல பாடகருக்கு நேர்ந்த பரிதாபம், சோகத்தில் ரசிகர்கள்
தனது சிறு வயதிலேயே பிரபல பாப் பாடகரான ஜஸ்டின் பீபருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் அதே போல் ஜஸ்டின் காதல் முறிவுக்கு ஏராளமான விமர்சனங்களை சந்தித்தாலும் அதனையெல்லாம் துடைத்தெறிந்து தனக்கென உலகம் முழுவதும் தனி பட்டாளத்தை உருவாக்கியுள்ள ஜஸ்டின் பீபர் தற்போது மோசமான உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
பாட முடியாத நிலையில் பாப் பாடகர்
shingles என்னும் ஒரு வித தோல் பிரச்சனை காரணமாக , அவர் Ramsay Hunt Syndrome என்னும் தசை நரம்பு பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக ஜஸ்டினால் முகத்தின் ஒரு பக்கத்தில் தசை நரம்புகள் செயலழிந்துள்ளது.
இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ஜஸ்டின் : என்னால் ஒரு பக்கம் கண்களை அசைக்க முடியவில்லை. சிரிக்க முடியவில்லை. எனது நாசியும் அசையாது. எனது முகத்தின் ஒரு பக்கம் paralysis ஆகிவிட்டது.
எனக்கு ஒய்வு வேண்டும்
எனது அடுத்த நிகழ்ச்சிக்காக பலர் காத்திருப்பார்கள். நான் இந்த நேரத்தில் நிகழ்ச்சியை ரத்து செய்வதால் பலருக்கு அது அதிருப்தியை ஏற்படுத்தும் என்பதற்காகத்தான் இதனை பதிவு செய்ய விரும்பினேன்.
நீங்களே பார்க்க முடியும் எனது உடல்நிலை நிகழ்ச்சியில் பாடும் அளவிற்கு தகுதியானதாக இல்லை. எனக்கு 100 சதவிகிதம் ஓய்வு தேவை என தெரிவித்துள்ளார் பிரபல பாப் பாடகரான ஜஸ்டின் கொரோனாவிற்கு பிறகு நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்படுவது இது மூன்றாவது முறை.
28 வயதான பாப் பாடகர் ஜஸ்டின் டொராண்டோவில் தனது முதல் இசை நிகழ்ச்சிக்கு தயாராகும் சில மணி நேரங்களில் இந்த பிரச்சனையை சந்தித்துள்ளார் என்பது குறிபிடத்தக்கது .